தமிழ் சினிமாவில் இதுவரை இயக்கிய அனைத்துப் படங்களையும் சூப்பர் ஹிட் ஆக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது படங்களில் தத்ரூபமான கொடுமைகளும் அதற்க்கு ஏற்ப நல்ல சமூக கருத்துகளும் அடங்கும். அதனாலேயே அவரது படங்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும்.
கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இவர் இயக்கிய விடுதலை படம் வெளியானது. எதிர்பார்த்தது போலவே தரமான படமாக இது அமைந்தது, மக்களும் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். இப்படத்தில் இத்தனை ஆண்டுகள் காமெடியனாக வந்த சூரியை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். விஜய் சேதுபதி மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஷூட்டிங்கில் உள்ளது. வெற்றிமாறன் மிகவும் நுட்பமான இயக்குனர். ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் தென்பட்டாலும் உடனே மீண்டும் ஷூட்டிங்க்கு சென்றுவிடுவார். அதனால் தான் இன்னுமும் படம் ஷூட்டிங்கில் இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகதிற்கான பணிகள் இன்னுமும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 6 மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் தன்னிடம் 8 நாட்கள் கால்ஷீட் பெற்று அதனை 100 நாட்களுக்கு இழுத்துவிட்டார் வெற்றிமாறன் என அண்மையில் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இது நேரத்தை மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்த பட்ஜட்டையும் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. அமைதியும் வசூலில் கைபற்றிவிடலாம் என செலவுக் செய்து வருகிறார்கள்.
இரண்டாம் பாகத்தை கேன்ஸ் பிலிம்ஸ் விழாவில் திரையிட்டனர். படத்தை பார்த்த பிறகு அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டி பெரிய மரியாதை செலுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் மேலும் சில காட்சிகள் ஷூட் செய்யவுள்ளதாக கூறி மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
படத்தில் போலீஸ் அராஜகம் குறித்து மறுபடியும் ஒரு முறை தெளிவாக காட்டியுள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் புத்தகத்தை தழுவியே விடுதலை படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் காட்டப்படும். இதில் விஜய் சேதுபதி மற்றும் அவர் பேசும் அரசியல் இடம் பெறுவதால் முதல் பாகத்தை விட அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.