மலையாள சினிமாவில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்றால் அது 2018 ஆம் ஆண்டு என்ற படம் தான். கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் டோமினோ தாமஸ், நரேன், லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்தது.ஓடிடியிலும் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. இந்த படத்தை இயக்கதிலிருந்து ஜூட் தாமஸ்க்கு பல்வேறு பெயரும் புகழும் வந்து சேர்ந்தது.
கூடவே பல மொழிகளில் திரைப்படத்தை ஏற்க வாய்ப்பு குவிந்தது. தற்போது ஜூட் தாமஸ் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் நிவின்பாலியும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்காக இயக்குனர் ஜூட் தாமஸிடம் கதையை கேட்டுள்ள லைக்கா அதனை உறுதி செய்து படத்தின் அட்வான்சையும் இயக்குனருக்கு கொடுத்திருக்கிறது.
தமிழில் கடந்த சில படங்களாக ஹிட் கொடுக்காமல் விஜய் சேதுபதி தவித்து வருகிறார்ம் அதனால் மீண்டும் ஒரு ஹிட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.இந்த நிலையில் ஜூட் தாமஸ் போன்ற இயக்குனரிடம் விஜய் சேதுபதி பணியாற்றினால் நிச்சயமாக அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் நிவின்பாலியும் தமிழில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை. அவருக்கு இங்கு ஏற்கனவே அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் நிவின் பாலியும் விஜய் சேதுபதியும் இணைந்தால் நிச்சயமாக படம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் ரிலீஸ் செய்யாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும் எடுக்க லைக்கா முடிவெடுத்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் எல்லாம் இன்னும் வெளியாகவில்லை. அனிருத்திடம் இசை அமைக்க கேட்க இயக்குனர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.