Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமா"முன்னணி இயக்குனருடன் விஜய் சேதுபதி மோதல்"? டிராப் ஆகிறதா புதிய படம் ?

“முன்னணி இயக்குனருடன் விஜய் சேதுபதி மோதல்”? டிராப் ஆகிறதா புதிய படம் ?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது விஜய் சேதுபதி ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் . இந்தத் த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இதுவரை இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

தமிழ் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமில்லாத பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் . இவர் இந்தியில் நடித்த பார்ஸி என்ற இணையதள தொடரும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . அதனைத் தொடர்ந்து இவருக்கு ஹிந்தியில் பயங்கரமான மார்க்கெட் கிடைத்திருக்கிறது . மேலும் இந்தி சினிமாவில் அதிக சம்பளத்துடனும் இவர் நடித்து வருகிறார் . தமிழ் படங்களில் குறைவாகவே கமிட் ஆகியுள்ள விஜய் சேதுபதி இந்தி சினிமாவில் அதிகளவிலான திரைப்படங்களில் நடித்த வருவதாக தெரிவிக்கின்றனர் .

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் மிஸ்கின் இடையே ஒரு நல்ல நட்பு உருவாக இருந்தது . அதன் காரணமாகவே பிசாசு 2 திரைப்படத்தில் அவருக்கு கௌரவ வேடம் ஒன்றை கொடுத்திருந்தார் மிஷ்கின் . மேலும் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின . இந்த திரைப்படத்தை கலைப்புலி தான் உதய அறிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்தத் திரைப்படம் தற்போது உருவாகாது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

- Advertisement -

விஜய் சேதுபதி மற்றும் விஸ்கி நடிகை இருந்த நல்ல நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி அடுத்த ஐந்து வருடங்களுக்கு கைவசம் படத்தை வைத்திருப்பதால் தமிழ் படங்களில் அவ்வளவு கமிட்டாகாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் இதன் காரணமாகவே இவர் மிஸ்கினுடன் இணைந்து பணியாற்ற இருந்த புதிய திரைப்படத்தை டீலில் விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மிஸ்கின் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் .

- Advertisement -

கலைப்புலி தானு அந்த திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. அந்தத் திரைப்படம் ஒருவேளை உருவாகாத பட்சத்தில் முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து இணையதளத் தொடரை மிஸ்கின் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . மிஸ்கின் பல மேடைகளில் விஜய் சேதுபதியை மனதார நண்பனாக பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular