சினிமா

விஜய சேதுபதியின் அதிர்ச்சி முடிவு.. ரசிகர்கள் ஏமாற்றம்

Allu Arjun and Vijay Sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதை வென்றவர்.அதே போல் தற்பொழுது பேட்ட, மாஸ்டர், விக்ரம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், உலக நாயகன் கமல் என்று முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்தார்.இவர் வில்லனாக நடித்த படங்களிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் மெர்சல், ராஜா ராணி,தெறி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்பொழுது முதன் முதலாக பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜாவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு கதாநாயகியாக நயன்தாராவும் இசையமைப்பாளராக அனிருத்தும் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது ஜவான் படத்தில் ஷாருக்கின் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் நடிப்பில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியாக்கியது புஷ்பா (the rise) திரைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 350 கோடி வசூலையும் பெற்று வெற்றி பெற்றது.

Advertisement

மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா (the raise) திரைப்படத்தில் நடிகர் பகத் பாஸில் வில்லனாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் விரைவில் வர இருக்கிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி தற்பொழுது ஜவான் திரைப்படத்தில் மட்டும் தான் வில்லனாக நடிப்பதாகவும் வேறு எந்த படத்திலும் வில்லனாக நடிக்க இன்னும் ஒப்பந்தம் இடவில்லை என்றும் கூறியிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவில் ஒப்பேனா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புஷ்பா படத்தில் முதல் பாகமானபுஷ்பா (the raise) திரைப்படத்திலேயே விஜய் சேதுபதி தான் பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை நடிக்க இருந்தார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.தற்பொழுது புஷ்பா 2 திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் பாலிவுட் ஆக்டர் மனோஜ் வாஜ்பாய் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியாகி வருகிறது.

நடிகர் மனோஜ் வாஜ்பாய் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதியை தமிழ் மற்றும் தெலுங்கு என்ற இரு மொழிகளில் மட்டும் நடிக்குமாறு ஹிந்தியில் நடிகர் மனோஜ் வாஜ்பாய் நடிப்பார் என்றும் கூறியதாகவும் அது தனக்கு சரியாக வராது என்று விஜய் சேதுபதி ஒப்பந்தமிட தயங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இருப்பினும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்த தகவல்களை கண்டு ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top