சினிமா

சூப்பர் அப்பு..!! ஷாரூக்கானுக்கு வில்லனாகிய விஜய் சேதுபதி.. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு

தமிழில் பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய அட்லி இப்பொழுது முதன்முதலாக பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படம் மூலம் கால் எடுத்து வைக்கிறார். தமிழ் சினிமாவில் அட்லி எடுக்கும் திரைப்படங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளும் சில இடங்களில் சென்டிமென்ட்களும் இருக்கும்.அதனால் குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு அவர் எடுக்கும் திரைப்படங்கள் அமைந்திருக்கும்.

Advertisement

மேலும் தமிழில் தெறி, பிகில் ராஜா ராணி போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதேபோன்று பாலிவுடில் சிறந்த முன்னணி நடிகரான ஷாருக்கான் தற்போது அட்லியுடன் கைக்கோர்த்து உள்ளார்.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் இறுதியாக நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. அதனால் புதிய படங்களின் அளிக்காமல் சில காலம் ஓய்வில் இருந்தார்.

இப்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறார். பதான், டாங்கி போன்ற திரைப்படங்களில் நடிக்க இருக்கும் ஷாருக்கான் அட்லி இயக்கம் ஜவான் திரைப்படத்திலும் நடிப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளி வந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து பின் மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்களில் வில்லனாக களம் இறங்கி கலக்கிய விஜய் சேதுபதி முதன்முதலாக பாலிவுட்டில் ஷாருக்கானிற்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

Advertisement

ஜவான் திரைப்படத்திற்கான சூட்டிங் இம்மாத இறுதியில் சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி தனது சம்பளமாக 30 கோடி ரூபாய் பெறுகிறார்
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்படும் நயன்தாரா முதன் முதலில் பாலிவுட்டில் ஷாருக்கான் இருக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழில் பல ஹிட்டான பாடல்களை முன்னணி நடிகர்களின் படங்களில் இயற்றிய இசையமைப்பாளர் அனிருத் தற்பொழுது ஜவான் திரைப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். ஜமான் திரைப்படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடா என ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top