Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாதொடரும் தோல்வி.. ஒரு வழியாக திருந்திய விஜய் சேதுபதி!

தொடரும் தோல்வி.. ஒரு வழியாக திருந்திய விஜய் சேதுபதி!

- Advertisement -

2017 ஆம் ஆண்டு குரங்கு பொம்மை என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், இயக்குனர் மற்றும் நடிகருமான பாரதிராஜா, நடிகை தர்மா தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை  இயக்குனர் நிதிலன்ஸ் சுவாமிநாதன் இயக்கினார். இந்தத் திரைப்படம் ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். மேலும் இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

இவற்றினை தொடர்ந்து தற்போது இயக்குனர் நிதிலன்ஸ் சுவாமிநாதன் மீண்டும் ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அவர் தேர்வு செய்திருக்கும் கதாநாயகன் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் ஒப்பனா திரைப்படத்திலும் தன்னுடைய வில்லன் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு இவரை யாரும் கதாநாயகனாக எண்ணவில்லையோ என்று தெரியவில்லை. ஏனெனில் இதற்குப் பிறகு இவர் நடித்த மாமனிதன், டிஎஸ்பி போன்ற திரைப்படங்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்படாமல் தோல்வியடைந்தது.இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட விஜய் சேதுபதி இனிவரும் படங்களில் நல்ல கதை இருந்தால் மட்டுமே நடிப்பதாக முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுடன் கைகோர்த்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் மிளகாய் ,முத்துக்கு முத்தாக, கர்ணன் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகரும் ஒளிபதிவாளருமான நட்டி எனப்படும் நடராஜன், சுப்பிரமணியன் ராட்சசன் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் முனீஸ் காந்த் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் என்டர்டைன்மென்ட் மூவி என்று கூறப்படுகிறது. பொதுவாகவே நடிகர் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பு அதை ரசிக்க பல ரசிகர்கள் கூட்டம் குவிந்து இருக்கும் இந்த நிலையில் இதைப் போன்ற ஆக்சன் என்டர்டைன்மென்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular