சினிமா

இது வேற லெவல் ! புஷ்ப ராஜ்க்கு வில்லனாகும் பவானி ! முக்கிய அப்டேட் வெளியீடு

Allu Arjun and Vijay Sethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோகளில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி தற்போது வில்லனாகவும் கலக்கி வருகிறார். முதன் முதலில் சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்தாலும் அதன் பிறகு வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை விஜய் சேதுபதி பிடித்துக் கொண்டார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக பேட்டை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன் பிறகு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டினார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் பவானி ரோல் முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கிடையில் தெலுங்கில் உப்பேனா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அங்கும் தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கினார் . விஜய் சேதுபதி நடிப்பிற்காகவே உப்பேனா திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. கதைக்களம் பிடித்திருந்தால் வில்லன் ஆகவும் நடிப்பேன் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதி, புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் நாடு தழுவிய அளவில் ஹிட்டானது.

Advertisement

தமிழகத்தில் மட்டும் 30 கோடி ரூபாய் மேல் வசூலை ஈட்டிய புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் நடப்பாண்டில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது இந்த படத்தில் ஃபகத் பாசில் போலீஸ் அதிகாரியாக அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதியும் தற்போது இணைந்துள்ளார். பெரிய தாதாவாக இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் ரோல் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த பாகத்தில் செம்மர கடத்தல் விவகாரத்தில் அல்லு அர்ஜுன் உடன் மல்லுக்கட்டும் வகையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. புஷ்பா ஏற்கனவே நாடு தழுவிய அளவில் ஹிட்டான நிலையில் தற்போது விஜய் சேதுபதி அதில் இணைந்துள்ளது அவருக்கு பிளஸ் ஆக கருதப்படுகிறது.புஷ்பா இரண்டாவது பாகத்தில் தற்போது விஜய் சேதுபதி இணைந்துள்ளது அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top