சினிமா

ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி‌ ? உண்மை இதுதான்

Sharukh Khan and Vijay Sethupathi

சிம்பு, கமல் கம்பேக்கை விட பல மடங்கு அதிரடியாக என்ட்ரியைக் கொடுக்க ஷாருக் கான் தயாராகி வருகிறார். பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து செயல்படுவதாக சென்ற மாதம் அறிவித்து ரசிகர்களின் வரவேற்பை சம்பாதித்தார். பின்னர் இயக்குனர் அட்லீயுடனும் கைகோர்த்துள்ளார். ஜவான் என பெயரிபடப்பட்டுள்ள இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பை ஃபர்ஸ்ட் லுக் மூலம் வெளியிட்டது படக்குழு. ஷாருக் கான் முகத்திலும் கையிலும் கட்டுப்பாட்டுக் கொண்டு பெஞ்சில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

படத்தில் கதாநாயகியாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய தம்பதிகள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஹனிமூனை முடித்துவிட்டு மீண்டும் தங்களது வேலைக்கு திரும்பியுள்ளனர். படத்தில் கதாநாயகியாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய தம்பதிகள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஹனிமூனை முடித்துவிட்டு மீண்டும் தங்களது வேலைக்கு திரும்பியுள்ளனர். மும்பையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் ஜூலை 15 வரை தங்கி, நயன்தாரா தன் பகுதிகளை நிறைவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Advertisement

தற்போது அனைவரது கவனமும் படத்தின் வில்லன் யார் என்ற கேள்வியின் பக்கம் திரும்பியுள்ளது. இரு தினங்களாக விஜய் சேதுபதியின் பெயர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை அல்ல. விஜய் சேதுபதியுடன் அட்லீ இது குறித்து பேசியது மறுக்கப்படாத உண்மை. ஆனால் அதற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்னும் தன் விருப்பத்தை தெரிவிக்கவில்லை. கால் ஷீட் தேதிகளை கவனித்து அதற்கு ஏற்ப தன் முடிவுகளை கூறவுள்ளார்.

ஒருவேளை இது நடந்தால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை ஊரே கொண்டாடும். சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்து இன்று மாதவன், விஜய், கமல் ஹாசன் ஆகிய பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்களின் கைதட்டுகளை வாங்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் தெலுங்கு நாயகன் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடிக்கும் புஷ்பா திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top