Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஜவான் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடிகள் சம்பளமா ? யாரும் வாங்காத அளவுக்கு பெரிய...

ஜவான் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடிகள் சம்பளமா ? யாரும் வாங்காத அளவுக்கு பெரிய தொகை !

2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படத்துக்குப் பின் தற்போது மூன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் பாலியுட் நாயகன் ஷாருக் கான். கையில் மூன்று பெரிய படங்களை வைத்துள்ளார். அதில் ஒன்று தான் ஜவான். தமிழில் 4 மெகா ஹிட் படங்களை தந்த அட்லீ முதல் முறையாக இந்த படத்தில் ஷாருக் கானை இயக்குகிறார்.

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் ஜவான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. அறிவிப்பு தேதியில் இருந்து சரியாக ஒரு ஆண்டுக்குப் பின், அதாவது 2வது ஜூன் 2023இல் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் சிறப்புக் தோற்றத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

வில்லன் விஜய் சேதுபதி என்றாலே விக்ரம் வேதா தான் பலரது நினைவுக்கு முதலில் வரும். பின்னர் மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிகட்டினார். அவரது அயராது உழைப்பு அவரை பாலிவுட் வரை அழைத்துச் சென்றுள்ளது. இப்படத்தில் முன்னாள் மிலிட்டரி ஆபிஷராக வரும் ஷாரூக் கானுக்கு வில்லனாக நடிக்க அவருக்கு அளிக்கும் சம்பளம் 21 கோடி. இந்தியாவில் வில்லனாக நடிப்பதற்கு அதிக தொகை வாங்குபவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் விஜய் சேதுபதி.

- Advertisement -

மும்பையில் ஒரு சில காட்சிகளை ஷூட்டிங் செய்த பின் படக்குழு தற்போது சென்னை வந்துள்ளது. படத்தின் நாயகன் ஷாரூக் காணும் அடுத்த ஒரு மாத காலம் ஜவான் ஷூட்டிங்கில் ஈடுபடவுள்ளார். ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் அட்லீ. அது என்னவென்றால், இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக நடிகர் விஜய் எந்த பணமும் வாங்கப் போவதில்லை என்றும் கூறுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

- Advertisement -

Most Popular