சிவகார்த்திகேயன் நடிப்பில் தேசிய விருது இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாவீரன். இதில் அதித்தி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா உட்போர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்ட திரைப்படம் அவ்வானைதையும் பூர்த்தி செய்துள்ளது.
டான், பிரின்ஸ் என அடுத்தடுத்த தோல்விப் படங்களுக்குப் பின் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. அதிலும் படத்தின் முதல் பாதிக்கு தான் அதிக கைதட்டல்கள். சிவகார்த்திகேயன் – யோகி பாபு காம்போவில் காமெடிகளை மக்கள் மிகவும் ரசின்றனர்.
மாவீரன் சர்ப்ரைஸ்
படத்தின் இரு தினங்களுக்கு முன் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய பங்காற்றியுள்ளாதாக கூறி அவருக்கு நன்றி சொல்லும் வகையில் ஓர் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. சிவகார்த்திகேயனுக்கு போட்டியாளராக கருதப்படும் விஜய் சேதுபதி அவரது போட்டியாளரின் படத்தில் இருப்பது எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை வெறும் டப்பிங் தான் ஆனால் படத்தையே அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் சக்தி கொண்ட வாய்ஸாக விளங்குகிறார். மாவீரன் படத்தில் கார்டூனிஸ்ட்டாக வரும் சிவகார்த்திகேயன் தன் வரைந்த படங்களில் இருந்து வரும் ஓசையை கேட்டு அதன் படி நடப்பவாரு படம் அமைந்துள்ளது.
மாவீரன் படத்தில் விஜய் சேதுபதியின் சம்பளம்
அந்த குரல் தான் விஜய் சேதுபதி உடையது. இதற்காக விஜய் சேதுபதி மூன்று நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். தன் பிசியான நேரத்தில் அவர் இதைச் செய்ததை விட இதற்காக காசே வாங்காமல் பணிபுரிந்தது பாராட்டுக்குரியது. அஷ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் மேல் இருக்கும் நட்புக்காக விஜய் சேதுபதி இதனைச் செய்ததாக கூறியுள்ளார். அவரின் உதவும் மனப்பான்மையை நாம் இன்று புதிதாக ஒன்றும் பார்க்கவில்லையே !