Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயகாந்த் நடித்து அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் பட்டியல்

விஜயகாந்த் நடித்து அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் பட்டியல்

நடிகர் விஜயகாந்த் மரணித்து சம்பவம் தமிழ் சினிமாவில் சோகக்கடலில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகர் விஜயகாந்த் நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர் நல்ல குணம் உடையவர் என்று இன்றளவும் பலர் பாராட்டி பேசி வருகிறார்கள்.

- Advertisement -

தன்னுடைய இரக்க குணத்தால் பலரின் பசி ஆத்தி இருக்கிறார் நடிகர் விஜயகாந்த் .அதே போல் தன்னுடைய நடிப்புத் திறனாய் பலரை மகிழ்வித்தும் இருக்கிறார்.

80களில் மற்றும் 90களில் வெளிவந்த விஜயகாந்த் திரைப்படங்கள் ஒரு வருடம் கூட திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அதைப்பற்றி பட்டியல் ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

2000இல் வெளிவந்த வல்லரசு திரைப்படம் 112 நாட்கள் ஓடி இருந்தது.

- Advertisement -

1994 இல் சேதுபதி ஐபிஎஸ் 2002இல் ரமணா ஆகிய திரைப்படங்கள் 150 நாட்கள் ஓடியது.

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1984 இல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் ,1986இல் அம்மன் கோவில் கிழக்காலே ,1994ல் என் ஆசை மச்சான் ,1989 பாட்டுக்கு ஒரு தலைவன் ,2000 வானத்தைப்போல போன்ற திரைப்படங்கள் 175 நாட்கள் திரையரங்குகளை ஓடி இருந்தது.

1988 பூந்தோட்ட காவல்காரன் 180 நாட்களும் அதே வருடத்தில் செந்தூரப்பூவே 186 நாட்களும் திரையரங்குகளில் ஓடியது.

1986 இல் வெளிவந்த ஊமை விழிகள் திரைப்படம் 200 நாட்கள் ஓடியது .மேலும் 1991 மாநகர காவல் 230 நாட்கள், 1990 புலன்விசாரணை 220 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.

1991 கேப்டன் பிரபாகரன் 300 நாட்களும் ,1992ல் சின்ன கவுண்டர் 315 நாட்களும் திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது.

ஒரே ஆண்டில் இரண்டு திரைப்படங்கள் 300 நாட்கள் 200 நாட்கள் என்று வருடம் கூட கடந்து ஓடி இருக்கிறது நடிகர் விஜயகாந்த் திரைப்படங்கள் அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அன்றிலிருந்து இருந்திருக்கிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் எல்லாம் இந்த காலத்தில் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். அவரிடம் ஒரு தனித்துவம் இருக்கும். காவல் அதிகாரி போன்ற கதாபாத்திரங்களுக்கெல்லாம் மிகவும் பொருத்தமான நடிகர் விஜயகாந்த்.

Most Popular