சினிமா

விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது அறிவிப்பு !

Vijay Varisu

மாஸ்டர், பீஸ்ட் படத்திற்கு பின் தளபதி விஜய் மீண்டும் அவரது வழக்கமான பாதைக்கு திரும்பியுள்ளார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைதப்பல்லிக்கு கீழ் குடும்பங்களை மகிழ்விக்கும் கதையில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் எறத்தாழ நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

இன்னும் 2 பாடல்கள் மட்டுமே மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நேற்று கூட ஜானி மாஸ்டர், “ தயாராகுங்கள் ரசிகர்களே ! தளபதி விஜய்யின் அனல் பறக்கும் நடனத்தை நீங்கள் யாரும் அமர்ந்து கொண்டு பார்க்க மாட்டீர்கள் என நான் உறுதியாகக் கூறுகிறேன். ” எனப் பதிவிட்டு இளைய தளபதி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டினார்.

ஏற்கனவே நடிகர் விஜய் கொடுத்த தேதிகளைத் தாண்டி இயக்குனர் வம்சி ஷூட்டிங் மேற்கொண்டு வருகிறார். இது நிறைவு பெற்றப் பின் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷன் வேலைகள் தான். இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே அமைக்கலாம்.

சென்ற முறை பீஸ்ட் படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்தும் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இம்முறை வாரிசு படத்திற்கு மிக பிரம்மாண்டமாக சென்னையில் இசை வெளியீட்டு விழா நடக்கபோகிறது. சென்னைக்குப் பின் ஹைதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெறும். கடைசியாக துபாயில் சிறப்பு புரொமோஷன் விழா நடக்கும் என தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன. இன்னும் இதற்கான தேதிகள் மட்டும் முடிவு செய்யவில்லை.

அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி என்று வாரிசு படத்தின் முதல் பாட்டு வரவிருக்கிறது. தமன் இதற்கு இசை அமைத்துள்ளார். தளபதி 67வது படத்தின் அப்டேட்டும் தீபாவளி விடுமுறைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.

திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. மறுபக்கம் அஜித்குமார் அவர்களின் துணிவு திரைப்படமும் அதே பொங்கலுக்கு வெளியாகும் என சொல்கின்றனர். இது உண்மையெனில் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு தல – தளபதி க்லாஷைக் காணலாம்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top