Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாதங்கலானுக்கு ஆப்பு வைக்க நினைத்த ரசிகர்கள்.. பயந்து விளக்கம் தந்த விக்ரம் தரப்பு

தங்கலானுக்கு ஆப்பு வைக்க நினைத்த ரசிகர்கள்.. பயந்து விளக்கம் தந்த விக்ரம் தரப்பு

கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் என்றால் அது அடுத்ததாக வரவுள்ள தங்கலான் தான். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாகவும் தமிழ் சினிமாவில் இதுவரை எடுக்கப்படாத துறை கதைகளமாகவும் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இதில் நடிகர் விக்ரமின் கதாபாத்திரத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் திகைத்துப் போனார்கள்.  இவர் என்ன ஆளே தெரியாத மாதிரி மாறிவிட்டார் என்று விக்ரமை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நடிகர் விக்ரம் என் வாழ்நாளில் நான் நிறைய படங்களுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

ஐ,பிதாமகன் போன்ற படங்கள் எல்லாம் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள். ஆனால் அதில் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் தங்கலான் மாற்றிவிட்டது.என் முந்தைய படங்களில் நான் மெனக்கெட்டதை விட தங்கலான் படத்திற்கு பல மடங்கு மெனக்கெடுத்து நடித்தி இருக்கிறேன் என்று கூறினார்.

- Advertisement -

இதை தொடர்ந்து பேசிய இயக்குனர் ரஞ்சித்தும் நடிகர் விக்ரம் உயிரை கொடுத்து இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் அதனால் மிகப்பெரிய பொறுப்பு தமக்கு இருக்கிறது என்ற பயத்தில் இந்த படத்தில் நடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விக்ரம் இந்த படத்தில் டயலாக் எதுவும் பேசவில்லை என்று செய்திகள் வெளியானது. டீசரில் தமக்கு எந்த டயலாக்கும் இல்லை என்றும் வெறும் வித்தியாசமான சவுண்ட் மட்டும் தான் கொடுப்பேன் என்றும் நடிகர் விக்ரம் பேசியிருந்தார்.

இது இந்த படத்தின் நடிகர் விக்ரமுக்கு இந்த வசனமே இல்லை என்பது போல் ரசிகன் நினைக்கத் தொடங்கிவிட்டனர். ஹீரோ வசனமே பேசாமல் என்ன படம் எடுக்க போகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இதனால் பயந்து போன நடிகர் விக்ரம் தரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதில் நடிகர் விக்ரமுக்கு இந்த படத்தில் வசனங்கள் இருப்பதாகவும் டீசரில்தான் டயலாக் எதுவும் இல்லை என்பதை விக்ரம் கூறியதை சில தவறாக திரித்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

Most Popular