Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇது லிஸ்டிலே இல்லையே! இரு நடிப்பு அரக்கர்களும் ஒரே படத்தில்.. அடே சூப்பர் இயக்குனர் ஆச்சே!

இது லிஸ்டிலே இல்லையே! இரு நடிப்பு அரக்கர்களும் ஒரே படத்தில்.. அடே சூப்பர் இயக்குனர் ஆச்சே!

நடிகர் விக்ரம் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் நிறைவு பெற்று வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது ஏற்கனவே பல நாட்கள் திரைப்படம் வெளியிடப்படாமல் தாமதமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இவர் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படமும் பல வருடங்களாக பல காரணங்களால் தடைப்பட்டு தற்பொழுது இயக்கப்பட்டு இருக்கிறது
ஆனால் இன்னும் சில பல காரணங்களால் இந்த திரைப்படம் திரையில் வெளியிடாமல் இருக்கிறது

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது விக்ரமின் 62வது திரைப்படம் பற்றிய அப்டேட்ஸ்கள் வெளிவந்திருக்கிறது சியான் 62  இயக்குனர் அருண்குமார் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இயக்குனர் அருண்குமார் கடைசியாக நடிகர் சித்தார்த்தை வைத்து சித்தா என்று திரைப்படத்தை இயக்கினார் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை பற்றி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு கவனம் வேண்டும் என்பதை அழகாக காட்டி இருந்தார் இயக்குனர் அருண்குமார்.

தற்பொழுது இவர் இயக்கம் சியான் 62 திரைப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது இன்னும் இந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவலும் வெளியாகி இருக்கிறது.

தற்பொழுது வரக்கூடிய திரைப்படங்களில் சிறந்த வில்லனாகவும் துணை கதாபாத்திரமாகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவை கலக்கி கொண்ட நடிகர் எஸ் ஜே சூர்யா தற்பொழுது இவர் சியான் விக்ரமிற்கு இந்த திரைப்படத்தில் வில்லனாக போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் பாரபட்சம் இன்றி நடிக்கும் எஸ் ஜே சூர்யாவும் அதற்கு கொஞ்சம் கூட சலிக்காத விக்ரமும் இணைந்து நடிப்பதும் அதுவும் எதிரிகளாக நடிப்பது இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Most Popular