Wednesday, March 27, 2024
- Advertisement -
Homeசினிமாசும்மா வெறித்தனம்..விக்ரமின் மாஸ் லுக்.. டைம் டிராவல் பற்றிய படமா தங்கலான்

சும்மா வெறித்தனம்..விக்ரமின் மாஸ் லுக்.. டைம் டிராவல் பற்றிய படமா தங்கலான்

- Advertisement -

நடிகர் விக்ரம் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மீது ஏற்கனவே பல்வேறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் இந்த படம் 3டி யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பா ரஞ்சித் தன்னுடைய புரட்சிகர கருத்தை வித்தியாசமான கதை களத்தை  வைத்து இந்த படத்தை எடுத்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மேலும் தங்கலான் படம் தங்கச் சுரங்கத்தில் நடைபெறும் மனித சுரண்டல்கள் குறித்து பேசப்படும் என முதலில் நினைக்கப்பட்டது. ஆனால் தற்போது நடிகர்  விக்ரம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம், படத்தின் மீதான கணிப்பை முற்றிலுமாக மாற்றியுள்ளது. இதில் நடிகர் விக்ரம் மாஸ் லுக்கில் பார்ப்பதற்கு மிரட்டலாக இருக்கிறார்.
இதில் அவர் பேக் டு தி ஃபியூச்சர் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தங்கலான் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பண்டைய காலத்தில் உள்ள காட்டுவாசி போல் தோற்றம் அளித்த நிலையில் தற்போது முற்றிலும் மாறாக செம ஸ்டைலிஷ் லுக்கில் அதே தாடியுடன் இருக்கிறார்.

- Advertisement -

இதில் பேக் டு தி ஃபியூச்சர் என அவர் பதிவிட்டுள்ளதால் தங்கலான் திரைப்படம் டைம் ட்ராவல் தொடர்பான கதையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித் ஏற்கனவே சாதி வேறுபாடு இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஒரு கதையை எழுதி வருவதாக கூறி இருந்த நிலையில் தங்கலான் அந்த கதையை தான் பேசுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

- Advertisement -

உலகில் சாதி பாகுபாடு பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் டைம் ட்ராவல் மூலம் வேறு இடத்திற்கு சென்று அங்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லாமல் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார் என்பதை குறித்து இந்த கதைக்களம் இருக்குமா என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். தங்கலான் படத்திற்கும் துருவ நட்சத்திர படத்திற்கு கிட்டத்தட்ட ஒரே லுக்கில் விக்ரம் இருக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular