சினிமா

விருமன் திரைப்படத்தால் விஜய், கார்த்தி ரசிகர்களிடையே மோதல்.. உண்மையிலேயே காப்பியா?

நடிகர் கார்த்தி நடித்து தமிழகம் முழுவதும் 400 திரையரங்கலுக்கு மேல் விருமன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் முத்தையா எடுத்துள்ள இந்த படத்தில் கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி இரண்டாவது முறையாக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக விருமன் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. கொம்பன் திரைப்படத்தைப் போலவே பல காட்சிகள் இதிலும் இடம் பெற்று இருப்பதாக சில ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.நடிகை அதிதி அறிமுகப்படத்தில் சிறப்பாக பணியாற்றி இருப்பதாக பாராட்டுகள் பெற்றுள்ளார்.இந்த நிலையில் விருமன் திரைப்படத்தின் மூலம் விஜய் ரசிகர்களுக்கும் கார்த்தி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

விருமன் திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சியில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை போல் இதில் இடம்பெற்று இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு கார்த்தி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது யுவன் சங்கர் ராஜாவின் சென்னை 28 படத்தில் ஜல்சா பண்ணுங்கடா பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட இசை போல் தான் தோன்றுவதாகவும், மாஸ்டர் படத்தில் தான் யுவன் சங்கர் ராஜா இசையை அனிருத் காப்பியடித்து வைத்திருப்பதாகவும் பதிலடி கொடுத்தனர்.

இதனால் இரு ரசிகர்களும் மாற்றி மாற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருமன் திரைப்படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளதாக திரைப்படம் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் திரையரங்கு வர்த்தகம் டல்லடித்ததாகவும், தற்போது விருமன் திரைப்படத்தின் மூலம் அது களைகட்ட தொடங்கி இருப்பதாகவும் சினிமா வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருமன் திரைப்படம் குறிப்பாக சிறிய நகரங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பெரு நகரங்களில் அவ்வளவாக ரசிகர்களை அந்த படம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top