Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமா“ நான் தான் விஷாலின் மகன். டைம் டிராவல் செய்து மார்க் ஆண்டனி படத்தைப் பார்க்க...

“ நான் தான் விஷாலின் மகன். டைம் டிராவல் செய்து மார்க் ஆண்டனி படத்தைப் பார்க்க வந்துள்ளேன் ” கோமாளித்தனமாக விமர்சனமா அளிக்கும் விஷால் ரசிகர்.. !

விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தலைமையில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆன்டனி. டிரைலரில் இடம் பெற்றிருந்த பஞ்சு மிட்டாய் பாடலும் அதிரடியான சண்டைக் காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டின.

- Advertisement -

நேற்று வெளியான இத்திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டைம் டிராவல் கதைக்களத்தில் 3 கேங்ஸ்டர்களை வைத்து ஓர் காமெடி கலந்த கமர்ஷியல் படத்தை உருவாக்கியுள்ளனர். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் எஸ்.ஜே.சூர்யாவின் நகைச்சுவையான உடல் பாவனையை மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. விஷாலின் கம்பேக்காக இது அமைந்துள்ளது எனவே கூறலாம்.

விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் அதிகபட்சமான காட்சிகளில் வருகின்றனர். அதன் பின் சுனில் இடம்பெறுகிறார். இவர்கள் தவிர கதாநாயகி ரித்து வர்மா மிகவும் குறைந்த நிமிடங்களே வருகிறார். மற்றவகள் செல்வராகவன், மகேந்திரன், கிங்ஸ்லி தங்களது பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் குடும்பமாக சென்று மகிழ் ஒரு பக்க கமர்ஷியல்.

- Advertisement -

தியேட்டருக்கு வெளியில் விமர்சனங்கள் அளிக்கும் மக்களில் ஒன்று இரண்டு நபர்கள் நகைச்சுவையாக சில சமயம் கோமாளித்தனமாக பதிலளிப்பர். அந்த வகையில் மார்க் ஆன்டனி படத்திற்கும் அப்படி ஒருத்தர் சிக்கியுள்ளார். அந்த ரசிகரை இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஷால் ரசிகர் ஒருவர், “ நான் எதிர்காலத்தில் இருந்து வந்துள்ளேன். விஷால் தான் என்னுடைய அப்பா. அவரின் கம்பேக் படமான மார்க் ஆண்டணியை திரையரங்கில் கண்டுகளிக்க காலம் பின்னோக்கி வந்துள்ளேன். ”

மேலும், “ விஷாலுக்கு கல்யாணம் ஆகி பிறக்கும் மகன் தான் நான். இந்தப் படத்திற்கு இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் பாகத்தைப் பார்க்க டைம் டிராவல் செய்துள்ளேன் அடுத்து இரண்டாம் பாகத்தைப் பார்க்க சென்று கொண்டிருக்கிறேன். ” எனக் கூறியுள்ளார். டைம் டிராவல் கதைக் கொண்ட படத்திற்கு அதே பாணியில் ஓர் நகைச்சுவை விமர்சனத்தை தந்துள்ளார்.

Most Popular