Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமிஸ்கினை நம்பி தெருவுக்கு வந்தேன்.. எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்.. கொதித்து எழுந்த விசால்

மிஸ்கினை நம்பி தெருவுக்கு வந்தேன்.. எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்.. கொதித்து எழுந்த விசால்

நடிகர் விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் துப்பறிவாளன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலில் வருவது போல் துப்புத் துலக்கும் கதை கொண்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு புது அனுபவமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஷால், மிஸ்கின் ஆகியோர் இணைந்து பணியாற்றிருந்தனர். இதற்காக படக்குழு லண்டன் சென்றிருந்தது. இந்த நிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஸ்கின் அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதை அடுத்து துப்பறிவாளன் திரைப்படத்தை தாமே இயக்கப் போவதாக விஷால் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. விஷாலை அவன் ஒரு பொறுக்கி சார் என்று மிஸ்கின் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

- Advertisement -

தற்போது மனம் மாறியுள்ள மிஸ்கின் விஷால் என் தம்பி போலவும் என்றும், அவர் அழைத்தால் இந்த படத்தை நான் இயக்குவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள  விஷால், மிஸ்கின் உடன் இணைந்து இனி என் வாழ்நாளில் மீண்டும் படமே செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

- Advertisement -

மிஸ்கினை நம்பி லண்டனுக்கு சென்று கடைசியில் அங்கு இருந்த பிளாட்பாரத்திற்கு தான் நான் வந்தேன் என்று வேதனை தெரிவித்தார். இயக்குனர் மிஷ்கினால் தான் மிகப்பெரிய இழப்பை சந்தித்ததாகவும், நான் மட்டும் ஒரு வயதான தயாரிப்பாளராக இருந்திருந்தால் அன்று எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்றும் விஷால் கூறியுள்ளார்.

ஏதோ வயதில் இளையவன் என்பதால் அன்று ஏற்பட்ட இழப்பை சரி கட்டி விட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் விஷால் கூறினார். துப்பறிவாளன் டு திரைப்படத்திற்கான கதையை தானே தயார் செய்து விட்டதாகவும் அதனை அடுத்த ஆண்டு நானே இயக்கி தயாரிக்க இருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார். அந்தப் படத்திற்கான கதையை தமது குழந்தை போலவும் கருதுவதாக விஷால் கூறியுள்ளார்.

Most Popular