சினிமா

லத்தி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு ! சிம்புவுடன் மீண்டும் மோத உள்ள விஷால்

Vishal laththi clash with simbu movie vtk

நடிகர் விஷாலுக்கும், சிம்புக்கும் நடிகர் சங்க விவகாரத்தில் ஏற்கனவே பிரச்சனைகள் இருந்தன. இந்த நிலையில் மீண்டும் இருவரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. நடிகர் விஷால் நடித்து நான்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ள படம் லத்தி. இதில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கிறார். வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் விஷால் லத்தியில் நடித்து வருகிறார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா ,நந்தா ஆகியோர் இணைந்து லத்தி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர் .

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா விஷாலுக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இந்த நிலையில் படத்தின் சூட்டிங் சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்றது . இதில் நடிகர் விஷால் தனது லத்தியை வைத்து வில்லன்களை அடிக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டது . இதில் வில்லன்கள் திரும்பி விஷாலை அடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது காலில் லத்தி பட்டது .இதில் சுருண்டு விழுந்த நடிகர் விஷால் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அன்றைய தினத்தின் காட்சிகளை நடித்துக் கொடுத்தார் .

ஆனால் அவருக்கு காலில் ஏற்பட்ட வலி தீராத நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது சென்னையில் உள்ள மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது . இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படமும் , விஷாலின் லத்தி திரைப்படம் ஒரே நாளில் திரையரங்குகளில் வரவுள்ளது.

இது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இருவருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாகவும் ரெட் கார்டு தொடர்பாகவும் சிக்கல் எழுந்தது. விஷாலின் திரைப்படம் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் அவர் லத்தி திரைப்படத்தை பெரும் எதிர்பார்த்து நம்பி உள்ளார். அதேசமயம் இயக்குனர் கௌதம் மேனன் சிம்பு ஜோடி இணைந்து உருவாக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படமும் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிம்புவுக்கு சாதகமான சூழல் நிலவி வருவதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top