சினிமா

மீண்டும் ராட்சசன் இயக்குனர் ராம் குமாருடன் இணையும் விஷ்ணு விஷால்… ! பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம்

Vishnu Vishal and Director Ramkumar

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இல்லாவிட்டாலும் நல்ல நல்ல படங்களைத் தருபவர்களில் ஓர் நடிகர் விஷ்ணு விஷால். அவரின் கடைசி 2 படங்கள் எப்.ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி இரண்டும் நல்ல வரவேற்பையே பெற்றன. அடுத்ததாக அவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன்,லால் சலாம் ஆகியப் படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த மூன்று படங்கள் தவிர அவர் ஏற்கனவே நடித்து முடித்து பல ஆண்டுகள் வெளியாகாமல் கிடக்கும் படம் இடம் பொருள் ஏவல். அப்படத்தின் ரீலீஸ் பிரச்சனையும் தீர்ந்த நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின் எப்.ஐ.ஆர் பாகம் 2 படம் தன் வரிசையில் இருப்பதையும் அவர் டிவிட்டரில் கன்பார்ம் செய்தார்.

Advertisement

இப்படங்கள் அனைத்தையும் தாண்டி இன்று இன்னொரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால். தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ ஹாட்டிரிக் காம்போ ’ என பதிவிட்டு குறிப்பு அளித்தார். அது என்னவென்றால், முண்டாசுப்பட்டி, ராட்சசன் என 2 வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் குமாருடன் மூன்றாவது முறையாக இணைகிறார் விஷ்ணு விஷால்.

இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். படத்தின் பட்ஜெட் இம்முறை அதிகம் எனவும் கூறப்படுகிறது. படத்தின் மற்ற செய்திகள் யாவும் இன்னும் வரவில்லை, இப்போதைக்கு வெறும் அறிவிப்பு மட்டுமே. ஏற்கனவே முண்டாசுப்பட்டி எனும் பீல் குட் படம் மற்றும் விஷ்ணு விஷாலின் கேரியர் பெஸ்ட் படமாக ராட்சசன் என 2 தரமான படைப்புகளை அளித்த ராம்குமார் இந்த முறையும் வெற்றிப் படத்தைக் கொடுத்து ஹட்டிரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top