லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார் நடிகர் விஜய். லியோ படத்திற்கு இடையே தன் அரசியல் கேரியருக்கான விதையையும் போட்டுள்ளார். தன் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் முதற்கட்ட பணிகளைத் துவங்கியுள்ளார்.
அதற்காக இயக்கத்தின் நிர்வாகிகளை கடந்த 2 மாதங்களாக சந்தித்துப் பேசி வருகிறார். ஆகஸ்ட் 26ஆம் தேதி பணையூறில் சமூக ஊடக நிர்வாகிகளை அழைத்து பெரிய விருந்து அளித்து அவர்களுக்கான பணிகளையும் அறிவித்தார் புஸ்சி ஆனந்த். தளபதி விஜய் ஊரில் இல்லாததால் இந்த சந்திப்பை புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விருந்துக்குப் பிறகு அறிக்கை ஒன்றைப் படித்து அவர்களை அதன்படி நடக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த அறிக்கை முழுக்க முழுக்க சமூக ஊடகத்தை நிர்வாகிக்கும் ரசிகர்களுக்காக மட்டுமே.
அறிக்கையில் குறிப்பிட்ட புள்ளிகள் :
• சமூக வலைதளங்களில் தரம் தாழ்த்தியோ ஆபசமாகவோ பதிவிடக் கூடாது.
• சமூக வலைதளங்களில் போடும் பதிவுகள் கருத்தியலாக இருக்க வேண்டும்.
• சாதி மதம் இனம் ஆகியன பிடிப்பில் சிக்கிவிடக் கூடாது.
• இயக்கத் தலைமை வெளியிடும் பதிவுகளின் லைக்குகள் மில்லியன்களைக் கடக்க வேண்டும்.
மேலும் சந்திப்பில் புஸ்சி ஆனந்த் முக்கியமாக குறிப்பிட்டதாவது, “ ரசிகர் மன்றமாக துவங்கி இன்று மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளோம். தமிழகத்தில் பலம் வாய்ந்த மக்கள் மன்றம் நாம் தான். அடுத்து வேறொரு பரிமாணம் எடுக்கவுள்ளோம். ”
தலைமை சார்பில் இவர் பேசிய அனைத்தும் பாரட்டக்குரியது. ஆனால் அந்த கடைசி புள்ளியை வைத்து எதிராலிகள் விஜய் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் பாடல்கள் தான் அதிக லைக்குல் கொண்டது என சின்னப் பிள்ளைத் தனமாக பேசி வருகிறார்கள். தற்போது புஸ்சி ஆனந்த்தின் இந்த அறிக்கை ரசிகர்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும் போல் இருக்கிறது. இதனை நிர்வாகிகளுக்கு மட்டும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.