Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசினிமா“ செருப்பு பிஞ்சிரும்.. காலில் விழுடா ” தப்பாக நடந்து கொண்ட தனுஷ் ரசிகரை ஓட...

“ செருப்பு பிஞ்சிரும்.. காலில் விழுடா ” தப்பாக நடந்து கொண்ட தனுஷ் ரசிகரை ஓட ஓட அடித்த சிங்கப்பென் ஐஷ்வர்யா ரகுபதி – வீடியோ வைரல்

நேற்று கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவின் கூட்டதில், தப்பான இடத்தில் தடவிய நபரை ஆத்திரப்பட்டு அந்த இடத்திலேயே துரத்தி துரத்தி அடித்து பெரிய ரகளை செய்துவிட்டார் நடிகை மற்றும் தொகுப்பாளரான ஐஷ்வர்யா ரகுபதி. அதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக உள்ளது.

- Advertisement -

தனுஷ் – அருண் மாதீஸ்வரன் ஜோடியில் உருவாகியுள்ள வாலாற்று போர் திரைப்படமான கேப்டன் மில்லரின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழா நிறைவு பெற்று அனைவரும் கலைந்து செல்லும் போது தனுஷ் ரசிகர் ஒருவர் அங்கு வந்த நடிகை ஐஷ்வர்யா ரகுபதியிடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

உடனே அதனைச் சுதாரித்த ஐஷ்வர்யா ரகுபதி, அந்த நபரை தலையில் அடித்து உடனே காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூச்சல் போட்டுள்ளார்.அந்த நபரும் காலில் விழுந்து மணிப்பு கேட்டார். அதன் பிறகு, “ செருப்பு பிஞ்சிடும், தப்பு செய்யலானா ஏன்டா ஓடுற நாயே ? ” என அதிக கோபம் கொண்டு கத்தினார்.

- Advertisement -

அத்தனை மக்கள் இருக்கும் கூட்டத்தில் அவமானம் தாங்காமல் அந்த நபர் விலகிச் செல்லும் போது இரண்டு அடி ஓடி தலையிலேயே தாக்கினார் ஐஷ்வர்யா ரகுபதி. மக்கள் என்னவாயிற்று எனக் கேட்டாலும், தனக்கு பங்கம் விளைவிக்க நினைத்த நபரை எதிர்த்து தானே சண்டை செய்தார்.

- Advertisement -

பிறகு தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், “ கூட்டத்தில் அந்த நபர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார். நான் உடனே அதே இடத்தில் எதிர்துவிட்டேன். அதெப்படி ஒருவனுக்கு ஒரு பெண்ணின் உடம்பை தடவ இவ்வளவு துணிச்சல் வரும் என்பதை என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனால் தான் கூச்சல் போட்டு அடித்துவிட்டேன். ” என்றார்.

மேலும், “ என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளனர், உலகத்திலும் நல்ல மனங்களைக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற மிருகங்களைச் சுற்றி இருப்பது மிகவும் பயமாக இருக்கிறது. ” என வருத்தத்துடன் தெரிவித்தார். ஏற்கனவே சரக்கு படத்தின் விழாவில் சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் பொது மேடையில் ஐஷ்வர்யா ரகுபதிக்கு மாலை அணிவித்தார், தற்போது தனுஷ் ரசிகர். ஆனால் இம்முறை உடனே அதற்க்கு ரியாக்ட் செய்தது சரியான செயல்.

Most Popular