சினிமா

குடும்பத்துடன் பாரீஸ் நகரில் மகிழ்ந்து வரும் அஜித் ! வைரலாகும் புகைப்படங்கள் & வீடியோ இணைப்பு

Ajithkumar in paris

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குடும்பத்துடன் சென்றுள்ளார். நடிகர் அஜித் ஏகே 61 திரைப்படத்திற்காக நீண்ட ஸ்டைலான தாடி, காதில் கடுக்கன், கோட் சூட் என கெத்தாக காட்சியளிக்கிறார். வெள்ளை நிறத்தில் தலைமுடியும், தாடியும் இருந்தாலும் தற்போது உள்ள இளம் ஹீரோக்களுக்கு செம டஃப் கொடுக்கும் அளவில் நடிகர் அஜித் ஹைட் டெக்காக காட்சியளிக்கிறார்.

அண்மையில் நடிகர் அஜித் லண்டனில் ஒரு கடையில் பொருட்களை வாங்கிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது நடிகர் அஜித் லண்டனில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்க்கு சென்றுள்ளார். அங்கு இரவு நேரத்தில் ஈஃபில் டவர் முன்பு நடிகர் அஜித் வாக்கிங் சென்றார் . அப்போது ரசிகர்கள் அவரை சுற்றி கொண்டு செல்ஃபி எடுத்தனர். பிறகு ரசிகர் ஒருவர் தனது ஜெர்சியில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ள, அஜித் அதனை நிகழ்ச்சி உடன் செய்தார்.

Advertisement

தற்போது நடிகர் அஜித் பாரிஸ் நகரில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் சர்வ சாதாரணமாக நடந்து செல்கிறார். அந்த வீடியோவை அந்த ரசிகர் பில்லா படத்தின் பிஜிஎம் மியூசிக் ஐ போட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது .மேலும் அஜித்தை பார்க்க வரும் தமிழ் ரசிகர்கள் அவருடன் எடுக்கும் போட்டோக்களும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சுமார் ஒரு வாரம் ஐரோப்பாவில் குடும்பத்துடன் உள்ள அஜித் அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார். அதன் பிறகு ஏகே 61 திரைப்படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங் நடைபெற உள்ளது . வலிமை திரைப்படம் சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. மேலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் பிறர் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. படத்தின் எடிட்டிங் மற்றும் கதை அமைப்பில் குறை இருப்பதாக பலர் சுட்டிக் காட்டினர். இதனால் ஏ கே 61 திரைப்படத்தை தனது பாணியில் வழங்கும் முயற்சியில் இயக்குனர் வினோத் படத்தை செதுக்கி வருகிறார். ஏகே 61 திரைப்படத்தில் அஜித்தின் இந்த லுக்கை மிகவும் கவனத்துடன் வடிவமைத்துள்ள வினோத் ரசிகர்களுக்கு இது புது அனுபவத்தை தரும் என நம்புகிறார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top