Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாஅட நம்ம தல ! கோட் சூட்டில் மிரட்டல் லுக் ! லண்டனில் சிசிடிவியில் பதிவான...

அட நம்ம தல ! கோட் சூட்டில் மிரட்டல் லுக் ! லண்டனில் சிசிடிவியில் பதிவான வீடியோ வைரல்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் தற்போது ஏகே 61 திரைப்படத்திற்காக லண்டனில் உள்ளார். வலிமை திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் வினோத்துடன் தல அஜித் கை கோர்த்துள்ளார். வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையிலும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான ஹச்.வினோத் மீது பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வலிமை திரைப்படம் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வலிமை திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

- Advertisement -

இதனால் அடுத்த படத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என உத்வேகத்துடன் இயக்குனர் ஹச் வினோத் பணியாற்றி வருகிறார் .இதற்காக ஸ்கிரிப்ட் வேலையை ஏற்கனவே முடித்துள்ள ஹெச் வினோத், படத்தை ஹாலிவுட் லெவெலில் எடுக்க திட்டமிட்டுள்ளார் .இதற்காக நடிகர் அஜித்துக்கு மாறுபட்ட கேரக்டரை ஹச் வினோத் உருவாக்கியுள்ளார் வெள்ளை தாடி ஸ்டைலான லுக் கோட் சூட் என நடிகர் அஜித் தோற்றத்தில் மிரட்டுகிறார் . இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

கோட் சூட் என்றாலே பில்லா, மங்காத்தாவின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தான் நினைவுக்கு வரும் ஆனால் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக ஜிப்ரான் இணைந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித் லண்டனில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். சாதாரண மக்களோடு மக்களாக கடையில் பொருட்களை வாங்கும் அஜித் திரும்பி செல்லும் போது எதிரே ஒரு பெண் வந்துள்ளார். அப்போது அஜித் ஒதுங்கி நின்று அந்தப் பெண்ணை போக சொல்லிவிட்டு மீண்டும் அவர் சென்றார். இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது .

- Advertisement -

இதனை பார்த்ததும் நடிகர் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அஜித் எவ்வளவு ஜென்டில்மேன் ஆக நடந்து கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று அவர்களது ரசிகர்கள் வழக்கம் போல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே இந்த காட்சிகள் கேலி கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. இது வீண் விளம்பரத்திற்காக லண்டன் கடையில் இருந்து சிசிடிவி காட்சிகள் வாங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் சிலர் இந்த சிசிடிவி காட்சியை வைத்து பல வீடியோ மீம்ஸ் களை தங்களது ரசனைக்கு ஏற்ப வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Most Popular