Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாகட்சி பெயரிலேயே இவ்வளவு அரசியல்.. விஜய் செய்த பெரிய தவறு.. வெளுத்து வாங்கியுள்ள அமீர் -...

கட்சி பெயரிலேயே இவ்வளவு அரசியல்.. விஜய் செய்த பெரிய தவறு.. வெளுத்து வாங்கியுள்ள அமீர் – வீடியோ இணைப்பு

கோலிவுட் டாப் நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தன் வாழ்வில் அடுதக்கட்டமாக அரசியலுக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஓராண்டாக அவரது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரைச் சம்பாதிதுள்ளது. அதை பெரிய அளவில் செய்ய அரசியல் அதிகாரம் தேவை என்பதற்காக புதிய கட்சியை அவர் துவங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லியில் ‘ தமிழக வெற்றி கழகம் ’ எனும் பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார். அரசியல் பணிகளுக்காக சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஒப்பந்தம் செய்துள்ளது படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளை மேற்கொள்ள உள்ளார் தளபதி விஜய். 2024ஆம் ஆண்டுடன் சினிமாவில் இருந்து விலகுகிறார். அதனால் இந்த ஆண்டு நடக்கும் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நேராக 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

விஜய்யின் அரசியல் வருகை மக்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறுபக்கம் குற்றச்சாட்டுகளும் கேளிகளும் வருகிறது. கட்சியின் பெயரில் பிழை இருப்பதைச் சுட்டிக் காட்டி ஒரு தரப்பினர் கேலி செய்கிறார்கள். இது குறித்து இயக்குனர் அமீரும் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

- Advertisement -

விஜய்யின் கட்சிப் பெயரில் வெற்றி எனும் வார்தைக்கு அருகில் ‘ க் ’ இல்லாமல் போனது எழுத்துப் பிழை. இதனை முதல் நாளே நெட்டிடசன்கள் பதிவிட்டனர். இந்தப் பிழைகள் விட பெரிய பிழை ஒன்று இருக்கிறது எனவும் அதில் தான் அரசியல் அடங்கி உள்ளது என இயக்குனர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “ விஜயின் கட்சிப் பெயர் குறித்து எனக்கு விமர்சனங்கள் உள்ளன. பெயரில் வெற்றி பக்கத்தில் அவர்கள் ‘ க் ’ போடாததைக் கூட விட்டுவிடுவோம். முதல் வார்த்தை ‘ தமிழக ’ என உள்ளது. அது தமிழ்நாடு என இருந்திருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏற்கனவே ‘ தமிழக ’ எனும் பெயர் கொண்ட காட்சிகளை விடுங்கள், புதிதாக வரும் கட்சியில் எப்படி தமிழ்நாடு என வைக்கத் தவறி இருக்கலாம். ”

அது தமிழ்நாடே தமிழகமா என்பதில் விஜய் எதைத் தன் மக்களுக்கு கற்றுத் தரப் போகிறார் என்பதைக் காண நான் ஆவலாக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார் அமீர்.

Most Popular