தமிழ் மொழியில் தலைசிறந்த இசையமைப்பாளர், ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தமிழனும் ஆகிய அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய தாய் மொழியான தமிழை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இவர் பல மேடைகளில் தமிழில் பேசியதையும், அருகில் இருப்பவர்களையும் தமிழில் பேச சொல்வதையும் நாம் பலமுறை பார்த்திருந்தோம். இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடந்து உள்ளது.
ஹிந்தி மொழி திணிப்பு குறித்தும், பலமுறை அதற்கு எதிராக குரல் எழுப்பி வரும் நபர்களில் முக்கியமானவர்கள். இப்போது இவர் இசையமைத்து வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்திற்கான இறுதி கட்ட பிரமோசன்கள் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. வருகின்ற 28ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இதற்கு இடையில் நடந்து முடிந்த, ஒரு தனியார் குழுமத்தின் விருது வழங்கும் நிகழ்வில் அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் ஏ ஆர் ரகுமான், அவரது மனைவியை பேசும் பொழுது ஹிந்திக்கு பதில் தமிழ் மொழியில் பேசத் சொன்னதால் அந்த அரங்கம் அதிர்ந்தது.
ஆங்கர் சாய்ரா பானுவை பேச அழைத்தபோது, ரஹ்மான் ஹிந்திக்குப் பதிலாக தமிழில் பேசச் சொன்னார். ரஹ்மானின் பேட்டிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்க பிடிக்கும் என்றார் சாய்ரா பானு. மேலும் அவர் பேசும் போது “மன்னிக்கவும், என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. அதனால், தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவருடைய குரலில் நேசித்தேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” என்று பேசி இருந்தார். இந்த காணொளியை தற்பொழுது வைரலாகி ஆகி வருகிறது.
தமிழ் ரசிகர்களும்,இந்த காணொளியை பகிர்ந்து அவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த காணொளி மூலம் பலரும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பாராட்டி வருகிறார்கள்.
கேப்புல பெர்பாமென்ஸ் பண்ணிடாப்ள பெரிய பாய்
— black cat (@Cat__offi) April 25, 2023
ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் 😁 pic.twitter.com/Mji93XjjID
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழியின் மொழியின் மீதான அன்பைத் தவிர, இந்திய இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் அறியப்படுகிறார். அவர் இரண்டு அகாடமி விருதுகள், ஒரு பாஃப்டா விருது, ஒரு கோல்டன் குளோப் மற்றும் நான்கு தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.