வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நாகா சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி மற்றும் சிலர் நடித்துள்ள திரைப்படம் கஸ்டடி. இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இத்திரைப்படம் மே 12ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
அண்மையில் ஐதராபாத்தில் நடந்து புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு & கோ மிகவும் தமாஷாக பேசியுள்ளனர். வெங்கட் பிரபுவின் செட் என்றாலே எப்போதும் கலகலவென இருக்கும். அங்கு சிரிப்புக்கும் பொழுதுபோக்குக்கும் பஞ்சமே இருக்காது.
கஸ்டடி புரொமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் வைரலான வாரிசு தயாரிப்பாளரின் பாணியில் வெங்கட் பிரபு பேசி தமாஷ் செய்தார். வாரிசு இசைவெளியீட்டு விழாவில், “ டேன்ஸ் வேணுமா டேன்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, சென்டிமென்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு ” என்ற தில் ராஜுவின் பேச்சு மிகவும் ட்ரெண்டாகியது மீம்சகள் பலவும் போடப்பட்டன.
இதே பாணியில் கஸ்டடி படத்தைப் பற்றி வெங்கட் பிரபு, “ ஹான்… என்ன சொல்றது… ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, பேமிலி சென்டிமென்ட் வேணுமா பேமிலி சென்டிமென்ட் உந்தி, பர்பாமன்ஸ் வேணுமா பர்பாமன்ஸ் உந்தி, என்ன வேணுமா எல்லாம் உந்தி ” எனத் தமிழ் தெலுங்குவைக் கலந்து பேசினார். அதைக் கண்டு நாகா சைதன்யா மற்றும் உடன் இருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
இதோடு கஸ்டடி படத்தின் கதையையும் மேடையிலேயே ஒப்பித்து அதிர்ச்சியை உண்டாக்கினார் வெங்கட் பிரபு. “ எப்போதும் ஹீரோ வில்லனை கொள்வது போல் தான் கதை எழுதுகிறார்கள். ஆனால் நான் இதில் வில்லனை பாதுகாப்பதே ஹீரோவின் பணியாக இருப்பது போல் அமைத்திருக்கிறேன். இருப்பினும் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே கோபம் மற்றும் மோதல் இருக்கும். ” எனக் கூறினார் வெங்கட் பிரபு.
#Custody: Director #VenkatPrabhu makes a Dil Raju promise! pic.twitter.com/nkMITavljr
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) May 8, 2023
மேலும், “ இக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் எழுதியிருக்கிறேன். படத்தில் வேகத்தை டூயட் பாடல்கள் குறைத்துவிடும் என்பதற்காக நீக்கிவிட்டேன். ஒரு இடத்தில் அதைச் சேர்க்க வாய்ப்பு இருந்தும் நடிகர் நாகா சைதன்யா அதை விரும்பாததால் நீக்கவிட்டோம். ” என்றார்.