சினிமா

ரசிகர்களுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் முதல் காட்சியை பார்த்த தனுஷ் & அனிருத் – வீடியோ இணைப்பு

Thiruchitrambalam FDFS

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். படத்தில் நாயகன் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் 3 அழகு தேவதைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். வழக்கம் போல இசையில் அனிருத் கலக்கிவிட்டார். படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.

இந்த திரைப்படம் உலகமெங்கும் இன்று ( ஆகஸ்ட் 18 ) வெளியாகியது. அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்படாததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் ஒன்றரை வருடங்களுக்குப் பின் தனுஷின் படத்தை திரையில் கான ஆர்வத்துடன் இருந்தனர். முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது.

Advertisement

முதல் நாள் முதல் காட்சி எப்போதும் ஸ்பெஷல் தான். ரசிகர்கள் பெரிய பேனர் மற்றும் ஃப்ளெக்ஸ் அடித்தும் பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடுவர். சென்னையில் அதற்கு பெயர் போன திரையரங்கு ரோஹிணி சில்வர் ஸ்கிரீன்ஸ். அங்கு படத்தின் முக்கிய நடிகர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை பார்ப்பர். இது வழக்கமாக நடக்கும் ஒன்று. அதே போல் திருச்சிற்றம்பலம் படத்தைக் காண நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் வந்திருந்தனர்.

அவர்களைக் கண்ட பின் திரையரங்கில் விசில் சத்தம் உச்சத்தை எட்டியது. காமெடி மற்றும் காதல் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் கண்டு மகிழுங்கள் என தனுஷ் டுவீட் செய்திருக்கிறார்.

தனுஷ் – மித்ரன் ஜவஹர் கூட்டணியில் வெளியாகி வெற்றி கண்ட யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் வரிசையில் திருச்சிற்றம்பலம் படமும் ஃபீல் குட் படமாக அமைய அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். படத்தின் முதல் பாதி சுமாராக இருப்பதாகவும் இன்னும் கதை என்னவென்று தெளிவாக உணர்தப்படவில்லை என பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top