தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பவர் சந்தானம். துவக்கத்தில் அவர் தனியாக நடித்த படங்கள் ஹிட் ஆகின பிறகு போக போக பழைய கவுன்ட்டர் காமெடிகள் வேலை செய்யாமல் போனது.
எனினும் இடையே ஓரிரு படங்கள் சுமாராக தருகிறார். அடுத்த மாதம் பிப்ரவரி 3ஆம் தேதி சந்தானத்தின் அடுத்தப் படமான ‘ வடக்குப்பட்டி ராமசாமி ’ வெளியாகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இதனையும் இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பையும் அதே சமயம் சர்ச்சையையும் கொண்டு வந்தது. தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாக சந்தானம் பேசியுள்ளது பெரிய பரபரப்பை உண்டாகியது. இதன் காரணமாக படத்தை விநியோகம் செய்யவிருந்த ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் பின்வாங்கியது.
இந்தப் படத்தில் சந்தானத்தின் பெயர் ராமசாமி ஆகும். டிரெய்லரின் துவக்கத்தில் ஒருவர், “ இந்த ஊருக்குள்ள சமியே இல்லனு சொல்லிட்டு திருந்த பையன் தான நீ ” எனக் கேட்டதற்கு சந்தானம், “ அய்யயோ நான் அந்த ராமசாமி இல்லை ” என பதில் சொல்லியிருப்பார். இது அவர் பெரியாரை ஏளனமாக பேசுவது போல இருந்ததாக மக்கள் எதிர்த்தனர்.
இது குறித்து இயக்குனர் அமீர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளுத்து வாங்கியுள்ளார். அவர் கூறியதாவது, “ சமீபத்தில் ஒரு படத்தில் கூட ஒரு படத்தில், நான் அந்த ராமசாமி இல்லை எனச் சொல்லி இருப்பார். ஆமா உண்மை அதான், உன்னால் ஒரு பொழுதும் அந்த ராமசாமி ஆக முடியாது. அவ்வளவுக்குலாம் உனக்கு தகுதியே இல்லை. ”
டேய் சங்கி டாய்லி @iamsanthanam கேட்டுச்சா…?? pic.twitter.com/sGjTWm1BI0
— கோரைப்பல்புலி லியோதாஸ் 🔥🦁🐯🗡🧊🦅❤ (@Koraippalpuli20) January 25, 2024
“ அந்த ராமசாமி ஆகுறதுக்கு நீ அவ்வளவு பெரிய ஆள் இல்லை. அதை நீ முதலில் உணரணும். அந்த ராமசாமி இல்லைனு நீ ஏளனமாக சொல்லி இருக்க, இப்போ நான் சொல்றேன். அந்த ராமசாமி ஆக நீ பல நூறு ஆண்டுகள் தவம் இருக்கணும், பல ஆயிரம் வருடங்கள் சேவை செய்யணும். ஏனென்றால் அந்த ராமசாமி அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ” என சந்தானத்திற்கு எதிராக கடுமையாக பேசினார் அமீர்.