சினிமா

“ வாரிசை விட துணிவு சிறந்தது… ” எனும் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த வம்சி… !

Vamsi about thunivu varisu

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிக்கா மற்றும் ஓர் நட்சத்திர பட்டாளம் நடித்த திரைப்படம் வாரிசு. தனது போட்டியாளர் அஜித்தின் துணிவு படத்துடன் மோதலில் ஈடுபட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரின் படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகின. இரு படங்களும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவரை விமர்சனப்படி துணிவு படம் வாரிசை விட சிறந்ததாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்பக் கதை என படம் துவங்கும் முன்பே தெரிவித்துவிட்டனர். அதற்கேற்றவாரே திரையரங்கிலும் குடும்பங்கள் குவிந்து கிடக்கின்றன. மாட்டுப் பொங்கல் அன்று வாரிசு திரைப்படம் 150 கோடியை கடந்துவிட்டது. விஜய்யை வைத்து படம் செய்தாலே இப்போதெல்லாம் மினிமம் கியாரண்டி. விடுமுறை தினங்களில் வாரிசு படம் துணிவை விட கூடுதல் ஸ்கிரீன் & கலெக்ஷன் பெற்றுள்ளது. காரணம் குடும்பங்கள் தான்.

இன்று வாரிசு படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. படத்தில் நடித்தவர்கள் பலர் அதில் பங்கேற்று தங்களது வார்த்தைகளை பகிர்ந்தனர். தயாரிப்பாளர் தில் ராஜு, “ அனைத்தையும் விட படத்திற்கு பாராட்டுகள் தான் முக்கியம். ” எனக் குறிப்பிட்டார். இசையமைப்பாளர் வழக்கம் போல எமோஷனல் ஆகிய கதையை பகிர்ந்தார். “ ரஞ்சிதமே பாட்டில் விஜய் அண்ணா 1:27 நிமிஷம் விடாமல் நடனமாடியது கண்கலங்க வைத்துவிட்டது. ” என்றார். இதே போல ஷாம், விவேக், சங்கீதா மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து நல்ல விதமாக பேசினர்.

படத்தின் ஆப் ஸ்கிரீன் நாயகனான வம்சி நேற்று தனது அப்பா படம் பார்த்துவிட்டு மகிழுச்சியானதை அடுத்து அவரைக் கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். வெற்றி விழாவில் படத்தைப் பற்றி விஜய் கூறியதை பகிர்ந்தார். வம்சி அவர்கள் விஜய்யிடம், “ படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா ? நீங்கள் மகிழ்ச்சியா ? ” எனக் கேட்டதாகவும் அதற்கு விஜய், “ எனக்கு மிகவும் சந்தோஷம். ” என பதிலளித்தாகவும் சொன்னார்.

விழா நிறைவு பெற்ற பிறகு காரில் ஏறும் முன் பத்திரிகையாளர்கள் அவரை சுற்றி வளைத்து விட்டனர். நிருபர் ஒருவர், “ வாரிசை விட துணிவு அதிக வசூலை ஈட்டியுள்ளது குறித்து என்ன சொல்கிறீர்கள் ? ” என பகீரென்று ஓர் கேள்வியைப் போட்டார். அதற்கு வம்சி, “ இதெல்லாம் என்ன கேள்வி, இரு படங்களும் நல்ல லாபத்தை சம்பாரிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை தான் படத்திலும் பார்க்கிறீர்கள். வாழு வாழவிடு ” என அவசர அவசரமாக கூறிவிட்டு காரில் ஏரினார். அந்தக் கேள்விக்கு சற்றுக் மனமில்லாமல் வேறு வழியின்றி சமாளித்து விட்டு கிளம்பியது அவரது பாணியில் தெளிவாக தெரிந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top