சினிமா

சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு.. ! சர்ப்ரைஸில் ரசிகர்கள் உற்சாகம்.. !

Silambarasan and Vijay

அட்மேன் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த ‘ பத்து தல ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் மார்ச் 18ம் தேதி நடந்தது. அண்மையில் நீண்ட முடியுடன் புதிய ஸ்டைலில் சிலம்பரசன் வீடியோ ஒன்றை வெளியீட்டு வைரல் ஆகினார். தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் படத்திற்கான லுக் எனக் கூறப்படுகிறது.

Advertisement

பத்து தல இசைவெளியீட்டு விழாவுக்கும் இதே ஸ்டைலில் கருப்பு உடையுடன் நுழைந்தார் சிலம்பரசன். அவரை சுற்றி ரசிகர் கடல். பின்னர் கௌதம் கார்த்திக், ஏ.ஆர்.ரஹ்மான் என மற்ற படக்குழுவினரும் வந்தனர். கோலாகலமான விழா சிம்புவின் வீடியோ எடிட்டுடன் துவங்கியது.

சிம்புவின் சமர்ப்பண வீடியோவில் நடிகர் விஜய்யின் காட்சி இடம் பெற்றிருந்தது. வாரிசு இரண்டாவது சிங்கிளான ‘ தீ தளபதி ’ பாடலின் லிரிகல் வீடியோவிற்கு சிம்பு நடனமாடினார். அதை நினைவுப்படுத்தி வாரிசு இசைவெளியீட்டு விழாவில் ‘ சிம்பு ! சிம்பு ! சிம்பு ! என்னை ரொம்ப டச் செய்துவிட்டீர்கள், நன்றி ” எனக் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement

பத்து தல விழாவில் விஜய் பேசியதை பெரிய ஸ்க்ரீனில் காட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் சத்தம் போட்டனர். சிம்புவும் முழு வீடியோவைப் பார்த்து எமோஷனல் ஆகிவிட்டார். விஜய்க்கும் சிம்புவுக்கும் இடையேயான நல்ல நட்பினைப் பற்றி டி.ராஜேந்திரனும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

விறுவிறுப்பான விழாவில் விஜய் எடுத்த செல்பியைப் போலவே சிம்புவும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து எடுத்து பதிவிட்டனர். நிகழ்ச்சியில் பத்து தல படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டதை அடுத்து ரஹ்மானின் இசை மழையில் வந்தவர்கள் நனைந்தனர். மொத்தம் 4 பாடல்கள், அனைத்தும் இணையத்தில் வெளியாகிவிட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top