தலைவர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படமான லால் சலாம் அண்மையில் வெளியாகியது. இப்படத்தை அவரின் மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, ஜீவித்தா, நிரோஷா, செந்தில் உள்ளிட்ட முக்கிய நபர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் விதத்தில் கதைக்களம் அமைந்துள்ளது. கிரிக்கெட் போட்டியை அரசியலுக்காக எவ்வாறு பயன்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கி பிறகு அவர்கள் எப்படி ஒன்றாக சேர்கிறார்கள் என்பது தான் கதை. நல்ல விஷயத்தை சொன்னாலும் இப்படத்தை இணையத்தில் ட்ரோல் செய்து தான் வருகிறார்கள்.
திரைப்பட வெளியீட்டுக்கு முன்னரே இசை வெளியீட்டு விழாவில் மகள் ஐஷ்வர்யா தன் தந்தை ரஜினிகாந்தை சங்கி என அழைப்பதை எதிர்த்துப் பேசினார். இதனை இணையத்தில் வைத்து செய்து விட்டனர். பட வெளியீட்டுக்கு பின்னர், தன் தந்தை சங்கி இல்லை என்பதை காட்டுவதற்காகவே இந்தப் படத்தை செய்துள்ளதாக கலாய்த்துக் கொண்டுள்ளார்கள்.
லால் சலாம் படம் எப்போதும் சுத்தமாக வரவேற்பையே பெறவில்லை.முதல் நாள் வசூல் 5 கோடியை கூட தாண்டவில்லை என்பது அவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. என்னதான் சூப்பர்ஸ்டார் படத்தில் உள்ளார் என்றாலும் மக்கள் மத்தியில் உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
படத்தின் விமர்சனங்களும் நன்றாக அமையவில்லை. மிகவும் சுமாராக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் ரஜினியின் ஒரு காட்சி தற்போது இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது. இரண்டாம் பாதியில், தன் மகனின் கை பறிபோனதை அடுத்து ரஜினிகாந்த் துக்கத்தில் சத்தமாக அழுவார்.
— VCD (@VCDtweets) February 12, 2024
அந்தக் காட்சியை குறிப்பிட்டு, இவர் அழுகிறாரா அல்ல சிரிக்கிறாரா ? கண்ணை மூடிக் கொண்டு வெறும் ஆடியோவை மட்டும் கேட்டால் நிச்சயம் சிரிக்கிறார் எனத் தான் தோன்றும் என நேட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர். மேலும் இதே போல் ஒரு சூழ்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினி அற்புதமாக செய்து இருப்பார். நல்ல வேலை நெல்சன் இருந்ததால் ஜெயிலர் ஓரளவு தப்பித்தது எனப் பதிவிட்டும் உள்ளனர்.