சினிமா

” ஸ்விக்கில வேலை பாத்தான் ” குருதி ஆட்டம் இயக்குனர் கனேஷ் மேடையில் கண்ணீர் – வீடியோ இணைப்பு

Kuruthi aattam director sri ganesh emotional in stage

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். முதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்திய அவர் உடனே அடுத்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2018 ஆம் ஆண்டு அதர்வாவுடன் குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கத் தொடங்கினார். ஆனால் இந்த படத்தில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டது. படம் பாதியில் நின்று போனது அதன் பிறகு கொரோனா சட்ட சிக்கல் என அனைத்தையும் தாண்டி படம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது .

பிறகு மீண்டும் தள்ளி போனது இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ், ஐந்தாண்டு காலம் கடும் போராட்டத்திற்கு பிறகு இந்த படத்தை வெளிக்கொண்டு வந்துள்ளதாக கூறினார். எட்டு தோட்டாக்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா தம்மை தொடர்பு கொண்டு படம் செய்ய வாய்ப்பு கொடுத்தார். நான் அடுத்த படத்திற்கு திரைக்கதை எழுத சுமார் 12 மாதங்கள் எடுத்துக் கொண்டேன்.

Advertisement

இதற்கு அதர்வா முழு சுதந்திரம் வழங்கி நீங்கள் எப்போ கதை ரெடி என்று சொன்னாலும் தாம் அதில் வந்து நடிப்பேன் என்று நம்பிக்கை அளித்தார். அவர் கொடுத்த நம்பிக்கை தான் குருதி ஆட்டம் உருவாக காரணமாக இருந்தது. படம் தொடங்கிய பிறகு சில பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. அப்போது என்னுடைய உதவி இயக்குனர்கள் எனக்கு பெரும் துணையாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் நீங்கள் வேறு படத்தில் சென்று பணியாற்றுங்கள், படம் தொடங்கியதும் கூறுகிறேன் என்று தெரிவித்தேன். அப்போது என்னுடைய உதவி இயக்குனர் ஒருவர் ஸ்விக்கியில் டெலிவரிபாயாக வேலை செய்தார்.

அப்போது படம் தொடங்கியவுடன் என்னிடம் கூறுங்கள் நான் உடனே வந்து விடுவேன் என்று அந்த உதவி இயக்குனர் கூறினார் என்று ஸ்ரீ கணேஷ் மேடைகளில் கண்கலங்கினார். குருதி ஆட்டத்தின் கதையை சொல்லும்போது அதர்வாவிடம் முதல் பாதையில் சொல்லி முடித்தேன். அப்போது அவர் எழுந்து நின்று என்னை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .அவர் என்னிடம் இரண்டாவது பாதி கேட்கவே இல்லை .

Advertisement

அதன் பிறகு நான் அவரிடம் பல நாட்கள் கழித்து இரண்டாவது பாதியை கூறினேன். அப்போது அதர்வா படத்தை பார்க்கும் மக்கள் பார்வையில் இருந்து ஒரு கேள்வி கேட்டார். அது எனக்கு சரியான தெரிந்தவுடன், படத்தின் கிளைமாக்ஸ் மாற்றி அமைத்தேன். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றோம் .இதற்கும் அதர்வா துணை நின்றார். எட்டு தோட்டாக்கள் திரைப்படம் போல் குருதி ஆட்டத்தையும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என ஊடகங்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top