சினிமா

வாரிசு வெற்றி.. ! ரசிகர்களுக்கு நன்றி சொல்லி கண் கலங்கிய வாரிசு படக்குழுவினர்… !

Varisu team emotional at rohini silver screens

கோலிவுட்டின் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த மோதல் இன்று கோலாகலமாக துவங்கியது. முதலில் அஜித்தின் துணிவு படம் 1 மணிக்கு திரையிடப்பட்டது. இதுவரை வந்த விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாகவே வந்துள்ளது. அதிரடியான முதல் பாதிக்குப் பின் கருத்தோடு மேலும் சில ஆக்க்ஷன் கலந்த பாதியாக அடுத்தது உள்ளதாம்.

மறுபக்கம் 4 மணிக்கு துவங்கியது வாரிசு படத்தின் முதல் காட்சி. நேற்றே சத்யம் திரையரங்கில் சிறப்பு பிரீமியர் காட்சி போடப்பட்டது. பிரபலங்கள் மற்றும் பல்வேறு சினிமா விமர்சகர்கள் அதில் கலந்து கொண்டனர். நல்ல ஃபேமிலி டிராமா என்றே அவர்களும் விமர்சனம் கொடுத்தனர். அதுவே வாரிசு அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்தது.

Advertisement

இன்று அதிகாலை நான்கு மணிக்கு ரோகினியில் ஆரம்பித்த காட்சிக்கு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இசையமைப்பாளர் தமன் போய் இருந்தனர். படத்தை ரசிகர்கள் கொண்டாடிய விதத்தையும் வந்த விமர்சனத்தையும் கண்டு எமோஷ்னல் ஆகிவிட்டனர். இயக்குனர் வம்சி கை எடுத்து நன்றி தெரிவித்தார். வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் ஆனந்தத்தில் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.

ரசிகர்களின் விமர்சனத்தின் படி முதல் பாதி, விஜய் மற்றும் யோகி பாபுவின் காமெடியில் செம கலகலவென இருந்தது எனவும் அடுத்து ஆக்க்ஷன் & சென்டிமென்ட் கலந்த பாதியாக தெரிந்தது என்றும் தெரிவித்துள்ளனர். படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் மூலம் கலெக்ஷனை அள்ளிவிடும். வாரிசு படக்குழுவினருக்கு இது மிகப் பெரிய வெற்றப்படமாக அமையும்பென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top