சினிமா

அடேங்கப்பா ! 5 மொழிகளில் பேசி அசத்தும் நடிகர் விக்ரம் ! பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ வெளியீடு

Ponniyin Selvan Vikram

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை பட குழு தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

நடிகர் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, சரத்குமார் ,பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி ,கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பெரும்படை இந்த திரைப்படத்தில் நடித்துள்ளன. டீசரில் நடிகர்களை விட ஐஸ்வர்யா ராயும் திரிஷாவும் சந்தித்துக் கொண்ட காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .இரண்டு தேவதைகளும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டதை தத்ரூபமாக மணிரத்தினம் காட்டியுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் படத்தின் உருவாக்கப்பட்ட விதம் என வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .அதில் நடிகர் விக்ரம் டீசரில் பேசிய இந்த கல்லும், ரத்தமும், போரும், பாட்டும் எல்லாம் அதை மறக்கத்தான்.. அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான் என்ற வசனத்தை ஐந்து மொழிகளிலும் ஒரே வீடியோவாக வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.

அண்மையில் நடிகர் கமல் விக்ரம் திரைப்படத்திற்காக ஐந்து மொழிகளிலும் ரசிகர்களுடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதே பாணியில் தற்போது நடிகர் விக்ரம் படத்தின் டயலாக்கை ஐந்து மொழிகளும் பேசி இருக்கும் வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது . இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு ரிலீஸ் ஆகிறது .இதன் பிறகுதான் செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் திரையரங்குக்கு பின் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top