Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇந்த வாரம் ஓ டி டி களில் வெளிவரும் திரைப்படங்கள் குஷியில் ரசிகர்கள்

இந்த வாரம் ஓ டி டி களில் வெளிவரும் திரைப்படங்கள் குஷியில் ரசிகர்கள்

அரையாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் திரையரங்குகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த திரைப்படம் வெளிவரவில்லை என்பது தமிழ் சினிமாவிற்கு நஷ்டமான ஒன்றுதான்.

- Advertisement -

இப்படி வந்த வாய்ப்பை நழுவ விட்டது தமிழ் சினிமா இருப்பினும் ஒரு சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு தான் இருக்கிறார்கள். சலார் போன்ற திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் அதற்கு பெரும்பாலும் குடும்ப ஆடியன்ஸ் வருவது இல்லை.

இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே நம்மை மகிழ்விக்க இந்த வார ஓட்டிட்டியில் திரைப்படங்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அது என்னென்னவென்று பார்ப்போம்

- Advertisement -

வருகின்ற 29ஆம் தேதி லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிகர் ஜெயின் இணைந்து நடித்த அன்னபூரணி என்ற திரைப்படம் சிம்ளி சவுத் என்கின்ற ஓ டி டி களில் வெளிவர இருக்கிறது. மேலும் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி ராஜலட்சுமி செந்தில் முதன் முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லைசன்ஸ் என்ற திரைப்படமும் ஆகாதமிழ் என்ற ஓ டி டி இல் வெளிவர இருக்கிறது

- Advertisement -

இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி நடிகர் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் ,இந்துஜா போன்ற பிரபலங்கள் நடித்திருக்கும் பார்க்கிங் என்ற திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது.

இந்த மூன்று தமிழ் திரைப்படங்களும் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் ஓடி டி களில் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் 12th fail , ராம் ,டைகர் 3 ,டோனா, சேவ்டு, பிறர் அறியாதவர் ,மங்கள வாரம், ஒன்ஸ் அப்பான் டு டைம் என்று மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் ஓடிடிகளில் வெளியிடப்பட இருக்கிறது விடுமுறை நாட்களில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும்.

இப்படி வீட்டில் இருந்தபடியே திரைப்படங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் திரையரங்குக்கு சென்று பார்க்கும் அனுபவத்தை தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதில் இதுவரை எந்த குறையும் ஏற்படவில்லை . அதைக் கருத்தில் கொண்டு தமிழ் சினிமா நல்ல குடும்பங்களுடன் கண்டுகளிக்கும் திரைப்படங்களை அரையாண்டு விடுமுறையில் வெளியிடாததை ஈடு செய்ய நிறைய திரைப்படங்களை ஓடிடிகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

Most Popular