சினிமா

தல 61 சூட்டிங் என்னாச்சு..? ரசிகர்களை திசை திருப்ப தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகிறதா? உண்மை என்ன?

நடிகர் அஜித் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்களை விட அவர் பொது இடங்களில் இருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது அதிகமாக வெளி வருகிறது. நடிகர் அஜித்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் அஜித் வெறும் நடிகர் மட்டுமல்ல, அவருக்குள் பல திறமைகள் இருக்கின்றன. கார் ,பைக் ஓட்டுவது , ட்ரோன்களை பறக்க விடுவது, பிரியாணி செய்வது ,போட்டோ எடுப்பது என பல்வேறு துறைகளில் கைதேர்ந்த அஜித் தற்போது துப்பாக்கி சூடும் வீரராக கலக்கி வருகிறார்.

Advertisement

ஆனால் நடிகர் அஜித்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது அவர் நடித்த சினிமா தான்.சினிமா மூலம் தான் அஜித் என்று ஒருவர் இருக்கிறார் என்று இந்த உலகத்திற்கே தெரிய வந்தது. தற்போது கூட நடிகர் அஜித் அடுத்த திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அண்மைக்காலமாக தல 61 திரைப்படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் அஜித் பாதியில் இருந்து வெளியேறி குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு இந்தியா திரும்பி வர, அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் நேரடியாக துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை குவித்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், அவர்கள் எதிர்பார்த்த அப்டேட் வரவில்லையே என்ற கலக்கம் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தல 61 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

Advertisement

இதனால் இயக்குனர் வினோத் தனது அடுத்த திரைப்படத்தில் சிறப்பான சம்பவம் செய்வார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் படப்பிடிப்பு நடப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் தான் நடிகர் அஜித் ரசிகர்களுடன் நிற்கிறார்,போலீசாருக்கு சல்யூட் அடிக்கிறார்,ஹோட்டல் ஊழியர்களுடன் நிற்கிறார், பைக்கிற்கு தானே பெட்ரோல் போடுகிறார் போன்ற புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகுவது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தல 61 திரைப்படம் என்னாச்சு என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதிலிருந்து திசை திருப்புவதற்காக தான் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தற்போது ஒவ்வொரு போட்டோவாக வெளியாகிறதா என்று கேள்வியும் சினிமா விமர்சர்களிடையே எழுந்துள்ளது. இதே போல் தொடர்ந்து புகைப்படம் ஆக வெளியிட்டு இருந்தால், அது அஜித் ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் திருப்திகரமாக இருக்கலாம். ஆனால் பொது ரசிகர்களிடையே ஒருவிதமான சலிப்பை ஏற்படுத்தி விடும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது .அஜித் எப்போது படப்பிடிப்புக்கு செல்வார்? படப்பிடிப்பில் நடக்கும் விஷயங்களை புகைப்படமாக வெளியிடுவது தான் ரசிகர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை தரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top