வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக போலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் துணிவு படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆகிறது. வாரிசு படத்துடன் மோதுவதால் துணிவு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துணிவு படத்தில் அஜித்துக்கு பதிலாக சண்டை காட்சிகளில் சுதாகர் என்ற டூப் ஆர்டிஸ்ட் நடித்திருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது.
துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் , அஜித் ஐரோப்பியா மற்றும் இந்திய அளவிலான பைக் சுற்றுப்பயணத்தில் மேற்கொண்டார். இதனால் படப்பிடிப்பு நிற்கக்கூடாது என்பதற்காக அஜித் மாதிரி உடல் அமைப்பை கொண்ட டூப் நடிகரை வைத்து பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக பல்வேறு சண்டை காட்சிகள், லாங் சாட் காட்சிகள், தண்ணீரில் ரைடு உள்ளிட்ட காட்சிகளில் அஜித்துக்கு பதிலாக சுதாகர் என்ற டூப் நடிகர் தான் நடித்திருக்கிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சுதாகரின் காட்சி ட்ரெய்லரிலே இடம் பெற்றிருப்பதாக விஜய் ரசிகர்களும் டிரெண்ட் செய்தனர். தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் ஆபத்து நிறைந்த காட்சிகளை டூப் வைத்தே நடிப்பார்கள்.
இதில் அஜித் மட்டும் விதிவிலக்கு அல்ல என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இது குறித்து படக் குழு தெரிவிக்கையில் சில பேட்ச் ஓர்க் ஷாட்களை எடுக்க இருந்தோம். இதில் சென்னை அண்ணா சாலைகளில் ஒரு காட்சியை வைத்தோம். அதில் அஜித் நடித்த கூட்டம் அலைமோதி விடும் என்பதற்காக டூப் நடிகரை பயன்படுத்தினோம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் டூப் நடிகர்கள் குறித்து செய்திகள் வெளியாகாது. ஒரு புகைப்படம் கூட வெளியாகாது. ஆனால் அஜித்தின் பெரிய மனசால் மட்டுமே முதல்முறையாக சுதாகர் என்ற டூப் நடிகர் குறித்து வெளியே வந்திருக்கிறது.
இதே போன்று அஜித் தான் வாட்டர் பைக்கில் ரைடு சென்ற காட்சி எல்லாம் நடித்ததே அஜித் தான் என்றும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. சண்டை காட்சிகளில் டூப் போட்டார் என்று வெளியான செய்தி ஆதாரமற்றவை என்று படக்குழு கூறியுள்ளது.அஜித் பல சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டதாக சண்டை கலைஞர் அளித்த பேட்டியை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து பதிலடி கொடுத்தனர்.