Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கப் போவது யார்..? கமல் திரைப்பட இயக்குனருக்கு வாய்ப்பு..!

தளபதி விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கப் போவது யார்..? கமல் திரைப்பட இயக்குனருக்கு வாய்ப்பு..!

தளபதி விஜய் தற்பொழுது சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்ல போகிறார் என்ற அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அதைத் தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத்தின் இயக்கத்தில் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்தை கடைசியாக நடிக்க போவதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தி திரைப்படத்திற்காக இயக்குநர் ஹச் வினோத் கதையை தயார் செய்து விட்டார் ஆனால் இதற்கு முன்பு இயக்குனர் ஹச் வினோத்தும் உலகநாயகன் கமலஹாசனும் இணைந்து ராஜ் கமல் ஃபிலிம் இண்டஸ்ட்ரி இன் தயாரிப்பில் உலக நாயகன் கமலஹாசனின் 233 வது திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டு விட்டது. அந்தக் கதையை இயக்குனர் ஹச் வினோத் இயக்கப் போவது இல்லை என்பதும் முடிவாகிவிட்டது .ஆனால், அந்த திரைப்படத்திற்காக ராஜ்கமல் ஃபிலிம் இண்டஸ்ட்ரி இடம் போட்ட ஒப்பந்தம் இன்னும் இருக்கிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்காக போட்ட ஒப்பந்தம் இருக்கும்பொழுது தளபதி 69 இயக்குவது சிக்கலான ஒன்று என்பதால் இயக்குனர் ஹச் வினோத் என் ஓ சி என்று சொல்லப்படும் ஒப்பந்தத்திற்கு தடையில்லாச் சான்றை பெற்ற பிறகு தான் தளபதி 69 திரைப்படத்தை எச் வினோத் இயக்க முடியும்.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் டி வி வி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கப் போவதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் திரைப்படத்தை இயக்குனர் எஸ் வினோத் இயக்கப் போவது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலும் இரண்டு மூன்று மாதங்களில் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular