Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்துவிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? ஏஆர் ரஹ்மான் சகோதரி விளக்கம்

இந்துவிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? ஏஆர் ரஹ்மான் சகோதரி விளக்கம்

இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கிவிட்டு இதற்கும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறிய ஏ ஆர் ரகுமான் ஆயிரம் ஆஸ்கார்களுக்கு தகுதியானவர்.

- Advertisement -

இவரது அமைப்பில் வெளிவரும் பாடல்களை கேட்ட போதே தெரிந்துவிடும். இதன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான் என்று அப்படி ஒரு தனித்துவத்தை அவருடைய இசையில் நம்மால் உணர முடியும். இசை புயல் ஏ ஆர் ரகுமான் இந்து மதத்தில் பிறந்து வளர்ந்தவர்.
பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் திலீப் குமார் என்பது ஆகும்

இவர் மதம் மாறி தான் ஏ ஆர் ரகுமான் என்று தன் பெயரை வைத்துக் கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.அதற்குப் பின் இருந்த சிலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது. தன்னை பெற்ற தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது மதங்களில் வேற்றுமை பாராது இந்துவாக இருந்த திலிப்க்குமார் தர்காவில் சென்று பிரார்த்தித்திருக்கிறார்.

- Advertisement -

அதன் பிறகு தன் தந்தை உடலில் சுகம் அடைந்தார். பின் சில காலம் உயிருடன் வாழ்ந்தும் இருக்கிறார். இந்த செயல் ஏ ஆர் ரகுமானுக்கு இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியது. அதனால் முழுமையாக தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இஸ்லாத்தை தன் மதமாக ஏற்றுக் கொண்டார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.இது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்

- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் மூன்று சகோதரிகளும் உடன் பிறந்திருக்கிறார்கள். .அதில் ஒரு மூத்த சகோதரியின் பெயர் தான். ஏ ஆர் ரைஹானா இவர் தான் தற்பொழுது இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமாரின் தாயார் ஆவார். ஜிவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமான் தாய்மாமன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

அத்தனை சகோதரிகளுக்கும் ஒரே ஆண்மகன் என்றால் அது ஜிவி பிரகாஷ் தான் ஜிவி பிறந்த பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கூட ஏ ஆர் ரகுமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரைஹானா ஒரு பேட்டியில் தான் இஸ்லாம் மதத்திற்கு மாற பத்து ஆண்டுகள் ஆகியது.ஐந்து வேளை தொழுகையும் என் வாழ்க்கையின் நடைமுறைப்படுத்த இத்தனை ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டது என்று தன்னுடைய மதமாற்றத்திற்கான அனுபவத்தை கூறியிருந்தார் ரைஹானா.

அதேபோல தன்னுடைய பெயர் காரணத்தையும் இதில் குறிப்பிட்டிருந்தார்.முதலில் நான் இஸ்லாமிற்கு மாறிய போது என்னுடைய பெயரை சனாஸ் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு ரைஹானா என்ற பெயர் மிகவும் பிடித்திருந்தது.

மேலும் என் சகோதரர் ஏ ஆர் ரகுமான் இடம் என்பதற்கு என்ன பொருள் என்று கேட்டேன் அதற்கு அவர் அல்லாஹு ரக்கா(A .R) என்பதைத்தான் சுருக்கி ஏ ஆர் என்று வைத்திருக்கிறேன். இதற்குப் பொருள் கடவுளின் பெயர் என்று கூறியிருந்தார் அதை ஏன் எனக்கும் சேர்த்து ஏ ஆர் ரைஹானா என்று வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார் ஏ ஆர் ரகுமானின் சகோதரி.

Most Popular