Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாவெளிநாட்டு சினிமாவில் தஞ்சை பெரிய கோயிலை காட்றாங்களா? நீங்க மட்டும் ஏன் எகிப்து காட்றீங்க- ஜெய்லர்...

வெளிநாட்டு சினிமாவில் தஞ்சை பெரிய கோயிலை காட்றாங்களா? நீங்க மட்டும் ஏன் எகிப்து காட்றீங்க- ஜெய்லர் பாடலுக்கு எழுத்தாளர் எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் எப்போதுமே பாடல்கள் என்றால் அதற்கு தனி முக்கியத்துவத்தை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வழங்குவார்கள். அதுவும் ஒரு பாடல் என்றால் நிச்சயமாக அது வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மேலும் சில பாடல்கள் வெளிநாட்டில் இருப்பது போல் செட்டு போட்டு இருப்பார்கள்.

- Advertisement -

அதில் அந்த காலத்தில் இருந்து இந்த காலத்து வரை எகிப்து செட்டு எல்லா பிரபல பாடலிலும் இடம் பெற்றிருக்கும்.இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட காவலா திரைப்பட செட்டும் எகிப்து வைத்து தான் போடப்பட்டு இருக்கிறது. இதற்கு பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அரவிந்த் குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்  கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் எகிப்து நாட்டின் பிரமிடுகள், பாரோ மன்னர்கள் போன்ற உடைகள், அவர்களின் அரண்மனைகள், அணிகலன்கள் தொடர்பான காட்சிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

என் தனிப்பட்ட பார்வையில் இதற்கான காரணிகளாக 2 விஷயங்கள் தோன்றுகிறது.
எகிப்து நாட்டின் புகழ்பெற்ற அதிபரான கமால் அப்துல் நாசர் 1960-ல் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போதைய பிரதமரான நேரு, நாசருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்தியா – எகிப்து இடையிலான உறவின் பொற்காலமாக அது இருந்தது.

- Advertisement -

அதே 1960-ம் ஆண்டில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரிக்க-ஆசிய நாட்டு திரைப்பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.

இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகுதான் தமிழ் திரைப்படங்களில் எகிப்து நாடு தொடர்புடைய காட்சிகள் அதிகம் இடம்பெறத் துவங்கின. ஆனால் எகிப்து நாட்டில் எடுக்கப்படும் எந்த படத்திலும் நமது தஞ்சை பெரிய கோயிலோ, மாமல்லபுரம் கடற்கரை சிற்பங்களோ, திருச்சி கல்லணையோ காட்டப்படுவதில்லை.

பிறகு எதற்காக இந்த எகிப்து கருமத்தைப் பிடித்துக் கொண்டு நாம் தொங்கி கொண்டிருக்க வேண்டும். எந்த விதத்தில் எகிப்து தொடர்பான காட்சிகள், சம்பந்தப்பட்ட படங்கள் – காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றன? அல்லது தேவைப்படுகின்றன?…

50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு செல்வது என்பது அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இன்று நிலைமை அப்படியில்லை. நேரடியாக செல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் தொழில்நுட்பம் வாயிலாக எந்த நாட்டினையும் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு எதற்காக இந்த வெளிநாட்டு காட்சிகள்?…

ஏ.சி.திருலோகச்சந்தர், ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன் காலகட்டத்தில் இத்தகைய கற்பனை தேவைப்பட்டிருக்கலாம், நெல்சன் – லோகேஷ் காலத்திலும் இதையே எடுத்துக் கொண்டிருந்தால் அவர்களின் மண்டையில் இருப்பது என்ன?…

ஜெயிலர் படத்தின் முதல் பாடலான காவாலா பாடல்காட்சியில் எகிப்து நாடு போன்ற அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. தமன்னாவையும் தாண்டி அந்த காட்சி, கண்களை உறுத்தியதால் இந்த பதிவு என்று அவர் கூறியுள்ளார். எழுத்தாளரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.

Most Popular