Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் படங்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை.. விளக்கம் கொடுத்த இயக்குனர்

விஜய் படங்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை.. விளக்கம் கொடுத்த இயக்குனர்

- Advertisement -

ஒரு காலத்தில் தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரி விலக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு திரைப்படங்கள் தமிழில் பெயர் சூட்டப்பட்டது. குறிப்பாக ரோபோ என பெயரிடப்பட்ட ரஜினியின் திரைப்படம் எந்திரன் என மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை மெல்ல மெல்ல மாற்றப்பட்டதால் தற்போது படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கும் நடைமுறை மீண்டும் ஓங்க தொடங்கியுள்ளது.

சிவகார்த்திகேயன் டான், பிரின்ஸ் என ஆங்கிலத்திலும் நடிகர் விஜய் மாஸ்டர் ,பீஸ்ட் ,லியோ என பெயரிட்டு வருகிறார்கள். இது குறித்து செய்தியாளர்கள் இயக்குனரும் லியோ பட குழு வை சேர்ந்த ரத்தினகுமாரிடம் கேள்வி எழுப்பினர் .இதற்கு பதில் அளித்த அவர் கதைக்கு தகுந்த மாதிரி பெயர்கள் வைக்கப்பட்டு வருவதாகும், வாரிசு என்று கடந்த படம் கூட தமிழில் தான் பெயர் வைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

- Advertisement -

மேலும் நடிகர் விஜயின் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா கேரளா போன்ற இடங்களில் அதிக மக்களால் பார்க்கப்படுவதால் ஒட்டுமொத்த மக்களுக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் லியோ பேன் இந்தியா படம் என்பதால் இந்த பெயரை தாங்கள் தேர்வு செய்ததாகவும் கூறினார். லியோ திரைப்படம் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ரத்தினகுமார் படப்பிடிப்பு வேலைகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

படத்தின் அப்டேட்டுகள் அனைத்தையும் வெளியிட்டு விட்டதாகவும் தற்போது அப்டேட் கூற ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய்க்கு கதை ஏதேனும் சொல்லி இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தான் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை என்றும் நட்பு ரீதிய கதைகள் குறித்து பேசி இருப்பதாகவும், ஆனால் தொழில் முறையாக இது தொடர்பான எந்த பேச்சு வார்த்தையும் நடந்தது இல்லை என்றும் ரத்தினகுமார் விளக்கம் அளித்தார்.

Most Popular