Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜய்க்கு நம்ம தல ஓட்டு போட்டு ஒத்துழைப்பு தருவாரா ? மாற்றம் வேண்டுமா ?...

தளபதி விஜய்க்கு நம்ம தல ஓட்டு போட்டு ஒத்துழைப்பு தருவாரா ? மாற்றம் வேண்டுமா ? ரவீந்திரன் கருத்து.. !

நடிகர் தளபதி விஜய் தன் 32 வருடங்கள் சினிமா வாழ்கையை இன்னும் 2 படங்களுடன் முடிவு செய்துவிட்டு அரசியலில் முழு நேரத்தைச் செலவு செய்யவுள்ளார். அதற்காக பிப்ரவு 2ஆம் தேதி டெல்லியில் ‘ தமிழக வெற்றி கழகம் ’ என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இனிமேல் விஜய் படங்களில் நடிக்காதது சினிமாத் துறைக்கு தான் நஷ்டம் என ரசிகர்களும் பிரபலங்களும் வருந்துகிறார்கள். எனினும் தன் வாழ்வில் அடுத்தகட்டமாக மக்களுக்கு நலன் செய்ய அரசியலுக்குள் வருவது விஜய்யின் நோக்கம் என்பதால் அதை மதிப்பது தான் மரியாதை.

2026 தேர்தலை மனதில் வைத்து விஜய் & கோ செயல்பட உள்ளது. தளபதி விஜய்யின் அரசியல் வருகை மிகுந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு அரசியல் வல்லுனர்கள் அவரின் துணிச்சலையும் இலட்சியத்தையும் பாராட்டி வருகிறார்கள். மறுபக்கம் பல விவாதங்களையும் பெற்றுள்ளது, அது சாதரமான ஒன்று தான்.

- Advertisement -

ஒரு பெரிய நடிகர்கள் விஜய் – அஜித் சினிமாவைத் தாண்டி மற்ற விஷயங்களில் எடுபட துவங்கியுள்ளார். விஜய்க்கு அரசியல் என்றால் அஜித்துக்கு உலக சுற்றுலா. இருவரும் சினிமாவில் போட்டியாளராக திகழ்ந்தாலும் ஸ்கிரீனுகு வெளியே நல்ல நண்பர்கள். தற்போது விஜய் அரசியலுக்குள் வந்ததை அஜித் எவ்வாறு காண்கிறார் ? அவருக்கு ஒத்துழைப்பு தருவாரா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

- Advertisement -

இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது, “ தல அஜித்தின் ஏரியாவில் யார் நிற்கிறார் எனத் தெரிந்து கொள்வதை விட தல அஜித்தைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் வரும். விஜய் நிற்க அஜித் வரிசையில் நின்று பட்டு போட மக்கள் அதைப் பார்த்து வியக்க அடடா சிறப்பாக இருக்கும். ”

“ மாற்றத்தை அஜித்தும் விரும்புகிறார் என்றால் நண்பனுக்கு இல்லாதது யாருக்கு என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் வந்து ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையைச் செய்பவர் நடிகர் அஜித். இந்த முறை தன் நண்பன் மூலம் மாற்றத்தை மக்களுக்கு அளிக்கலாம் என அஜித் நினைத்தால் நிச்சயம் ஓட்டுப் போடுவார். ” என தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியுள்ளார்.

Most Popular