Monday, December 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் இப்படி செய்யனும்னு அவசியமே இல்லை..! உண்மையை பேசுறாரு! ரஜினி குடும்பம் கருத்து

விஜய் இப்படி செய்யனும்னு அவசியமே இல்லை..! உண்மையை பேசுறாரு! ரஜினி குடும்பம் கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது தான் தற்போது ஒரு வாரமாக மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளம்பி இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இனி சினிமாவில் யார் அந்த இடத்தை நிரப்ப போகிறார்கள் என்று கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

நடிகர் ரஜினிக்கும் வயதாகி விட்டது. அஜித் திரைப்படங்களின் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. சூர்யா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு படத்தை நடிக்கிறார். இந்த நிலையில் விஜய் படம் ரிலீஸ் ஆகாமல் போனால் அது திரையரங்குகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று திரைத்துறை வல்லுநர்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து சூப்பர் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்த ஒய் ஜி மகேந்திரன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் நடிகர் விஜய் தன்னுடைய முதல் திரைப்படமாக வெற்றி என்ற படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

- Advertisement -

தற்போது அவருடைய கட்சியிலும் வெற்றி என்ற பெயர் இருக்கிறது. அவருடைய படங்களும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயம்தான் எனக்கு நடிகர் விஜய் செய்ததுல் மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அவர் தற்போது நம்பர் ஒன் நடிகராக சினிமாவில் இருக்கிறார்.

- Advertisement -

அவர் நினைத்திருந்தால் சினிமாவில் கோடி கோடி கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்றால் மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்ய அவர் விருப்பப்படுகிறார் என்பதுதான் பொருள்.

சிலர் திரைப்படம் ஓட வில்லை என்றால் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். ஆனால் இவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வருகிறார்.இதனால் விஜயின் இந்த செயல் உண்மையாகவே பாராட்டத்தக்கது என்று ஒய் ஜி மகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது கோட் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். அதன்பிறகு தன்னுடைய 69 ஆவது திரைப்படத்தில் நடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

Most Popular