தற்போதைய காலத்தில் யூடியூப்பில் அன்றாட நடக்கும் வாழ்க்கையை நகைச்சுவையாக மக்களுக்கு எடுத்துக்காட்டி மகிழ்விக்கும் சேனல்கள் பல உருவாக்கி விட்டது. அதில் பிளாக் ஷீப், நக்கலிடிஸ், மைக் செட் ,நரி கூட்டம் என்று பல சேனல்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது. இது போன்ற சேனலில் வெப் சீரியஸ்களில் நடிப்பவர்களுக்கெல்லாம் சீரியல் நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இது நரி கூட்டம் என்று சொல்லப்படும் சேனலில் ஜனனி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் தன்னுடைய 16 ஆவது வயதிலேயே தன்னுடைய முதல் படத்தை நடிக்க இருந்திருக்கிறார்.கதா நாயகியின் ரோலினுடைய சிறுவயது கதாபாத்திரமாக இவர் ஒரு நான்கு நாட்கள் நடித்திருக்கிறார்.பிறகு அந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனரே அவரிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜனனி அன்று திரைப்பட வாய்ப்பே வேண்டாம் என்று வெளியேறி விட்டாராம்.அப்படி அவர் நடிக்க செல்லும்போதெல்லாம் ஓரிரு நாட்கள் பள்ளிக்கும் விடுமுறை எடுத்துக் கொள்வாராம். இதனால் அங்கு இருந்த ஆசிரியர்களும் நடிகை வந்துவிட்டாள் ஷூட்டிங் இன்று இல்லையா என்றெல்லாம் கேட்டு கேலி செய்திருக்கிறார்கள். இதனாலும் மனம் உடைந்த ஜனனி இனி நான் படிக்கப் போவதில்லை என்று முடிவு செய்து 12-ம் வகுப்பையும் பாதியிலேயே முடித்துக் கொண்டாராம்.
இப்படியாக தன் பள்ளி பருவத்தை முடித்த ஜனனிக்கு நரி கூட்டம் சேனலுக்கு நடிக்க வருவதற்கு முன்பு ஒரு படம் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரிடம் இரண்டு பேருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும்படி கேட்டார்களாம் அவர் மறுத்ததும் மூன்று லட்சம் தொடங்கி 15 லட்சம் வரை பேரம் பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர் எதற்குமே ஒத்துவராமல் இந்த பட வாய்ப்பு வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டாராம்.இதற்குப் பின் தான் இவர் நரி கூட்டம் என்ற சேனலில் நடித்து தற்பொழுது பிரபலமாகி வருகிறார்.
மேலும் இவர் பெண்களை வளர்க்கும் பெற்றோர்கள் பெண்களை தைரியமாக வளர்க்க வேண்டும் என்றும் எப்பொழுதும் அவர்களுடைய சுதந்திரத்திற்கு துணையாக நிற்க வேண்டும் என்றும் கூடியிருந்தார். அவ்வாறு இருந்தால் பெண்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் சமூகத்தால் ஏற்படாது என்று பெண்களைப் பெற்றவர்களுக்கு என்னுடைய கருத்தாக இந்த அறிவுரையை கூறியிருக்கிறார். மேலும் பெண்களைப் பெற்றவர்களே இது தவறு அது தவறு என்று மிரட்டி வைப்பதால் தான் பெண்களும் எல்லா பிரச்சினையும் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள் என்ற விதத்தில் இவர் கூறிய கருத்துக்கள் அமைந்திருந்தது.