சினிமா

லியோ படத்தில் இணைந்த பிரபல யூடியூபர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்றால் ஒரு காலத்தில் இளைஞர்கள் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. ஒவ்வொரு இயக்குனர்கள் வீட்டு வாசலிலும் தவம் கிடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் மாறிவிட்டது.

Advertisement

திறமை இருப்பவர்கள் ஷார்ட் பிலிம், யூடியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தாங்களாகவே வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனலை வைத்திருக்கும் இர்பான் வியூஸ் காஷ்மீரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இதனால் லியோ பாடத்தில் அவர் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. youtube நட்சத்திரங்களுக்கு எப்போதும் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பதை ஒரு செயலாகவே லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார். ஏற்கனவே யூட்யூபில் சமையல் செய்யும் விலேஜ் தாத்தாவை அழைத்து தன்னுடைய படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திக் கொண்டார்.

Advertisement

மேலும் அவர்கள் செய்யும் தொழிலையே படத்திலும் காட்டி லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திக் கொள்வார். இந்த நிலையில் உணவுகளை ருசி பார்த்து சேனல் நடத்துபவர்தான் இர்பான். இதனால் அவரை அதே பாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் அழைத்து இருப்பார் என தெரிகிறது.

நடிகர் விஜய் சாக்லேட் ஃபேக்டரி நடத்தி வருகிறார் என்பது நம் அனைவரும் தெரிந்தது. இதில் இர்பான் வியூஸ் வந்து உணவுகளை ரிவியூ சொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top