Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமா100வது முறையாக கம்பேக் கொடுத்த யுவன்.. அண்ணன் வெங்கட் பிரபுக்கு மட்டும் ஸ்பெஷலாக  மியூசிக் டிரிட்

100வது முறையாக கம்பேக் கொடுத்த யுவன்.. அண்ணன் வெங்கட் பிரபுக்கு மட்டும் ஸ்பெஷலாக  மியூசிக் டிரிட்

- Advertisement -

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நாஹ சைதன்யா தற்பொழுது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஒருவராவார். இவர் தற்பொழுது தன்னுடைய 22 ஆவது படமாக கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளிவர இருக்கிறது
நாக சைதன்யாவிற்கு இது 22 ஆவது திரைப்படம் என்றாலும் தமிழ் சினிமாவிற்கு அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரும் அளவு கொண்டாடப்பட்ட நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தான் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் 30 வினாடி க்ளிம்ப்ஸ் வீடியோ  2023 ஆம் ஆண்டு துவக்கமான இன்று வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவருமே இசையமைத்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவிற்கு கடந்த ஆண்டு வந்த ஏஜென்ட் கண்ணாயிரம் லத்தி போன்ற திரைப்படங்களில் வந்த பாடல்கள் சற்று குறைவான வரவேற்பை பெற்றது. ஆனால் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்திற்கு நல்ல இசையை யுவன் தந்துள்ளார்.

- Advertisement -

இதனால் வெங்கட் பிரபுவுக்கு மட்டும் ஸ்பெஷலான மியூசிக் தரும் யுவன் சங்கர் ராஜா மற்ற இயக்குனர்களுக்கு மொக்கையான இசை வழங்கி சொதப்புவதாக விமர்சனம் எழுந்துள்ளது.  கிளிம்பிசில் வரும் பிஜிஎம்களை பில்லா திரைப்படத்தில் வருவது போன்று மாசாக உள்ளது. அதனால் இந்த திரைப்படத்தின் உடைய பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் கூடுதல் சுவாரஸ்யமாக இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் இசையமைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இளையராஜா ,யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு என்று தந்தை மகன் என்று ஒரு குடும்பங்களாகவே இந்த திரைப்படத்தில் ஈடுபட்டு உருவாக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவருக்காக ஒருவர் தங்களுடைய சிறந்த செயல்பாட்டை  இந்த படத்தில் கூடுதலாக கொடுத்திருப்பார்கள்.மேலும் இந்த திரைப்படத்தின் தெலுங்கு சினிமாவில் ஒப்பண்ணா திரைப்படத்தில் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக  நடித்திருக்கிறார் மற்றும் நடிகர் அரவிந்த்சாமியும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

திரைப்படம் வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தின் உடைய ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஸ்டடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கும் நாக சைதன்யாவிற்கு இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதால் இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவிலும் தனக்கென்று ஒரு இடம் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular