சினிமா

யுவன் ரசிகர்களே உயிர்த்தெழுங்கள்.. உங்களுக்கான கிளாஸ் அப்டேட் இதோ

2010 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்தது பையா திரைப்படம். இந்த திரைப்படத்தின் நடிகர் கார்த்தி  மற்றும் நடிகை தமன்னா நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஒரு புதுமையான கதைகளத்தை கொண்டது. குறைவான கதாபாத்திரங்களை வைத்து ஒரு அழகிய காதல் கதையை இயக்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

அதேபோல் இந்த திரைப்படத்தில் பாடல்களும் ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வெற்றியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல் தற்போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமி பையா 2 திரைப்படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார்.
இவற்றைத் தொடர்ந்து பையா டு திரைப்படத்தை தயாரிப்பதற்கு தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடிக்க இருக்கிறார். சார்பட்டா திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த நடிகர் ஆர்யா, அதற்குப் பிறகு எந்த ஒரு நல்ல கதையும் தேர்ந்தெடுத்து இதுவரை அவர் நடிக்கவில்லை. அவர் இடையில் நடித்த அரண்மனை பாகம் 3 திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்படவில்லை .

Advertisement

இயக்குனர் முத்தையா விருமன் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திலும் நடிகர் ஆரியா நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதால் இயக்குனர் முத்தையா இயக்கம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு நடிகர் ஆர்யா இயக்குனர் லிங்குசாமியுடன் கைகோர்க்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளிவந்து உள்ளது.

இன்னும் பையா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுப்பதாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார். அதே போல் தற்பொழுது இயக்க இருக்கும் பையா 2 திரைப்படத்திலும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்று தகவலும் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு பையா 2 திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top