தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நாயகனாக விளங்கி வந்தவர் கமல்ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக கமல்ஹாசனின் திரைப்பட வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. அவர் நடித்த சில படங்கள் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூல் செய்யவே திக்கு முக்காடியது. இந்த நிலையில் இது அனைத்தையும் உடைத்து மீண்டும் உச்சத்துக்கு கமல்ஹாசனை கொண்டு சென்ற படம் விக்ரம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்த விக்ரம்.
உலகம் முழுவதும் 450 கோடி ரூபாயை ஈட்டியது. இதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கமல்ஹாசனின் சம்பளமும் மேலும் அதிகரித்துள்ளது. விக்ரம் அடைந்த வெற்றியை தொடர்ந்து அவருடைய பாதியில் நின்ற படங்களும் மீண்டும் தொடங்கியது. விக்ரமுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடர்ந்தார்.
தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தென்னாபிரிக்காவில் அடுத்த ஷெடுலை தொடங்க பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் லைகா தான் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை தயாரிக்கிறது. இதன் பட்ஜெட் அதிகம் என்பதால் தீபாவளி அன்று இந்த படத்தை வெளியிட்டால் போதிய வருமானம் கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.காரணம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் தான் வசூல் கிடைக்கும்.
இதன் மூலம் போட்ட பணத்தை எடுக்க முடியாது என்ற காரணத்தால் படத்தை பொங்கல் விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் செய்ய லைக்கா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் எதிர்பார்த்த வசூலை எடுத்து விடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஏகே 62 திரைப்படம் நடப்பாண்டில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தை விட நடிகர் அஜித் படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு படங்களுக்கும் லைக் தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.