Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாலால் சலாம் டீசர் எப்படி இருக்கு? படம் தேறுமா?

லால் சலாம் டீசர் எப்படி இருக்கு? படம் தேறுமா?

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் படமாக்கப்பட்டு இருக்கும் லாஸலாம் திரைப்படத்தின் டீசர் தற்பொழுது இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஜெய்லர் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகள் இயக்கம் லால் சலாம் திரைப்படத்தின் சிறப்பு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இது இவருடைய கதாபாத்திரம் குறுகிய நேரம் என்றாலும் இந்த திரைப்படத்தின் டீசரை பார்க்கும் பொழுது திரைப்படத்தின் உடைய திருப்புமுனையாகவே இவருடைய கதாபாத்திரம் தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்திருக்கிறார்கள். இது கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்றுதான் ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

- Advertisement -

ஆனால் இந்த டீசரை பார்க்கும் பொழுது மதவாதத்திற்கு கிரிக்கெட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை தவறு என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தட்டி கேட்பது போன்று தான் இத்திரைப்படம் அமைந்திருக்கும் என்று டீசரை பார்க்கும்பொழுது தோன்றுகிறது. தற்பொழுது ரசிகர்களிடம் இத்திரைப்படம் கிரிக்கெட்டை பற்றியதா இல்லை மதவாதத்தைப் பற்றியதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் உடைய டீசரில் சண்டை காட்சிகள் அதிகம் இருப்பதால் இது ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இந்த டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்களிடம் விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க ,குழந்தைங்க மனசுல கூட விஷத்தை விதைச்சு இருக்கீங்க என்று அவர் கூறும் அந்த வசனம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்று இருக்கிறது.

சிறப்பு கதாபாத்திரமாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் நிச்சயம் இத்திரைப்படத்தை தூக்கி சுமந்து சென்று வெற்றியடைய செய்து விடுவார்கள்.திரைப்படத்தின் உடைய டீசரில் சூப்பர் ஸ்டார் வரும் சண்டை காட்சிகளுக்கு தற்பொழுது ரசிகர்கள் வரவேற்பை தந்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரசிகர்கள் இணையத்தில் தலைவரின் திரைப்படத்திற்கு 200 கோடிக்கு மேல் வசூல் கன்ஃபார்ம் என்று தங்களுடைய ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் உடைய வசூலை தற்பொழுது வெளியாகி இருக்கும் விஜய் நடித்த லியோ திரைப்படம் முறியடித்திருக்கிறது. அந்த நிலை லால் சலாம் திரைப்படம் வெளியான பிறகு மாறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது காட்டுதீப் போல் பரவி வருகிறது.

Most Popular